Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜபக்சே அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர்கூட இல்லை! திருமாவளவன் போராட்டத்தில் குதிப்பாரா?

ராஜபக்சே அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர்கூட இல்லை! திருமாவளவன் போராட்டத்தில் குதிப்பாரா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 10:53 AM GMT


இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.


மகிந்த ராஜபக்சே, இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்று கொண்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் முதல் கட்டமாக கடந்த 22- ஆம் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.


பின்னர் நேற்று (27.11.2019) விஸ்தரிக்கப்பட்டது. இதில் 38 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் ராஜபக்சே அமைச்சரவையில் 54 பேர் (பிரதமர் உள்பட) உள்ளனர். இதில் இந்திய வம்சாவளி தமிழரான ஆறுமுக தொண்டைமானும், வட மாகாணத்தை சேர்ந்த தமிழரான டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சர்களாக உள்ளனர். இதன் மூலம் ராஜபக்சே அமைச்சரவையில் 2 தமிழர்களுக்கு பிரநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளன.


ஆறுமுக தொண்டமானுக்கு சமூக வலுவூட்டல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


மஹிந்த ராஜபக்ஷவின் 54 பேர் கொண்ட அமைச்சரவையில் இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் ஒருவருக்குக்கூட பதவி வழங்கப்படவில்லை. இதன் மூலம் முஸ்லிம்களை ராஜபக்சே சகோதரர்கள் திட்டமிட்டே புறக்கணித்து உள்ளது தெளிவாகிறது. இது இலங்கை உள்ள முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


உலகில் எங்கு முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை நடந்தாலும் உனனே குரல் எழுப்பும் திருமாவளவன் இலங்கை முஸ்லிம்களுக்கு ராஜபக்சே அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாது தொடர்பாக போராட்டம் நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story