Top
undefined
Begin typing your search above and press return to search.

பட்டாசு வியாபாரியிடம் ரூ.4.6 கோடி மோசடி செய்த திருமாவளவன் கட்சி மாநில நிர்வாகி கைது!

பட்டாசு வியாபாரியிடம் ரூ.4.6 கோடி மோசடி செய்த திருமாவளவன் கட்சி மாநில நிர்வாகி கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 7:19 AM GMT


திருச்சி மன்னார்புரத்தில் எல்பின் (ELFIN) என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ரியல் எஸ்டேட், பணம் வட்டிக்கு விடுவது, ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்பது போன்ற தொழில்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ராஜா மற்றும் ரமேஷ்குமார் ஆகியோர் உள்ளனர். ராஜா, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தகப் பிரிவு மாநில துணை செயலாளராகவும், ரமேஷ்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சு ஊடக பிரிவு மாநில துணை செயலாளராகவும் இருந்து வருகின்றனர்.


கடந்த பாராளுமன்ற தேர்தலில் போது, ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி பெரம்பலூர் அருகே கார் கதவுகளில் மறைத்து வைத்து 2 கோடி ரூபாய் எடுத்து செல்லப்பட்டபோது, திருமாவளவன் கட்சியினர் கையும் களவுமாக பிடிபட்டனர். இந்த சம்பவம், அப்போது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பணம் எடுத்துச் செல்லப்பட்ட கார் ரமேஷ்குமாருக்கு சொந்தமானது. அந்தப் பணமும் தனக்கு சொந்தமானது என்று ரமேஷ்குமார் தெரிவித்து அப்போது திருமாவளவனை காப்பாற்றினார்.


அதேபோல வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவல்கள் அடிப்படையில், அப்போது எல்பின் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.





விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில துணைச் செயலாளராக உள்ள ராஜா, அறம் மக்கள் நல சங்கம் என்ற திருமாவளவனின் மற்றொரு அமைப்பின் மாநில தலைவராக உள்ளார். அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக ரமேஷ்குமார் உள்ளார்.


இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பட்டாசு வியாபாரி கோவிந்தராஜ், ரமேஷ்குமார் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் மோசடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ரமேஷ்குமார் தன்னிடம் இருந்து பட்டாசு வாங்கியுள்ளார். இதன் மொத்த மதிப்பு 4,63,36,840 ரூபாய். அந்தப் பணத்தை தராமல், ரமேஷ்குமார் மோசடி செய்துள்ளார். அத்துடன் அந்த பணத்தை கேட்ட தன்னை, கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்து உள்ளார்.


இதனைத்தொடர்ந்து மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையாளர் ஜஸ்டின் பிரபாகர் விசாரணையை மேற்கொண்டார். இதில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சி ஊடகப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ரமேஷ்குமார், கோவிந்தராஜிடம் பட்டாசு வாங்கிவிட்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தது நிரூபணமானது. இதனைத்தொடர்ந்து ரமேஷ்குமார் உள்பட 9 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். ரமேஷ்குமார், அவரது மேலாளர் சுந்தர்ராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


ரமேஷ்குமார் மீது நிதி நிறுவனங்கள் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஏற்கனவே வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story