Top
undefined
Begin typing your search above and press return to search.

சர்வதேச விஸ்வாமித்ரா விருதுகளை கைப்பற்றிய இரண்டு இந்தியர்கள்

சர்வதேச விஸ்வாமித்ரா விருதுகளை கைப்பற்றிய இரண்டு இந்தியர்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 7:18 PM GMT


ஒடியா மொழியின் நாளேடான சம்பாதின் நிறுவனரும் ஆசிரியருமான சௌமியா ரஞ்சன் பட்நாயக், பத்திரிகை துறையில் முதல் சர்வதேச விஸ்வாமித்ரா விருதை பெறுகிறார்.


மகப்பேறு பிரிவின் கீழ் இந்திய சமூக ஆர்வலர் சிந்துதாய் சப்கல் இந்த விருதை பெறுகிறார். மற்ற பிரிவுகளில் இந்த விருதை பெறுபவர்கள், ஐரோப்பா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்கள்.


சர்வதேச விஸ்வாமித்ரா விருது வழங்கும் விழா, முதன்முதலில், நவம்பர் 30, 2019 அன்று இத்தாலி நாட்டின் சிராகுசாவில் நடைபெறுகிறது. அந்தந்த துறைகளில் தங்களுக்கு கிடைத்தவற்றில் ஒரு பகுதியை சமூகத்திற்கு திருப்பித் தர முடிவு செய்து வாழ்பவர்களை கெளரவிக்கும் நோக்கில் விஸ்வாமித்ரா விருதுகள் வழங்கப்படுகின்றன.


"கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவி வரும் சமூகப் பங்களிப்பு பற்றிய கருத்தை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த நிகழ்வை முன் நின்று நடத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று சிராகுசாவின் மேயர் பிரான்செஸ்கோ இத்தாலியா செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்தார். யோகா வித்யா ஆன்லஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி, இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்தின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.



Press conference held at Siracusa, Italy


சுவாமி ஆனந்தா சரஸ்வதியின் வாஸ்து பற்றிய சர்வதேச மாநாடு மற்றும் விஸ்வாமித்ரா விருதுகள் வழங்கும் விழா இத்தாலி நாட்டில் சிராகுசாவில் உள்ள அர்பன் சென்டரில் நடைபெறுகிறது.


"நாம் வாழும் இடம் நம் மனதையும், பழக்கவழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் பாதிக்கிறது. இந்த சூழலில், சிராகுசா நகரம், வளமான கட்டடக்கலைகளை கொண்டுள்ளதால், கிழக்கையும் மேற்கையும் கட்டிடக்கலைகள் மூலம் ஒன்றிணைப்பதற்கான நேரடி சான்றாக விளங்குகிறது", என்று சுவாமி ஆனந்தா சரஸ்வதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


ஒடியா நாளேடான சம்பாத்தின் நிறுவனரும் ஆசிரியருமான செளமியா ரஞ்சன் பட்நாயக் பத்திரிகை பிரிவின் கீழ் இந்த விருதைப் பெறுகிறார். மகப்பேறு பிரிவின் கீழ் இந்த விருதை சிந்துதாய் சப்கல் பெறுகிறார். "அனாதைகளின் தாய்" என்று அன்பாக அழைக்கப்படும் சிந்துதாய் சப்கல் ஒரு இந்திய சமூக சேவகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். குறிப்பாக இந்தியாவில் அனாதைக் குழந்தைகளை வளர்ப்பதில் அவர் செய்த பணிக்காக அறியப்பட்டவர். மற்ற பிரிவின் கீழ் உள்ள விருதுகளை இத்தாலி, ஜப்பான், பிரேசில், சுவிட்சர்லாந்து மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெறுகின்றனர்.


Next Story