Top
undefined
Begin typing your search above and press return to search.

கடலூரில் வீடு இடிந்து குழந்தை உட்பட 3 பேர் பலி!

கடலூரில் வீடு இடிந்து குழந்தை உட்பட 3 பேர் பலி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 5:34 AM GMT


கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 1 வயது பச்சிளம் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலியானார். படுகாயங்களுடன் 3 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கடலூரில் உள்ள திருப்பாதிபுலியூர், கம்மியம்பேட்டை பகுதி சுசிலா நகர் ரயிஸ்மில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். அவருடைய மனைவி மாலா. இவரின் மருமகள் மகேஷ்வரி, பேத்திகள் தனஶ்ரீ, யுவஶ்ரீ உட்பட 6 பேர் சிமென்ட் ஷீட் பொருத்திய வீட்டில் வசித்து வந்தனர்.





இந்த நிலையில் நேற்று இரவு பெய்த தொடர் மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பச்சிளம் பெண் குழந்தை தனஶ்ரீ மற்றும் மாலா,மகேஷ்வரி ஆகிய 3 பேர் உயிர் இழந்தனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், இடிந்து விழுந்த சுவற்றை அப்புறப்படுத்தி சுவற்றின் அடியிலிருந்த நாராயணன், ரஞ்சிதா, யுவஸ்ரீ ஆகிய மூன்று பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாலா, மகேஸ்வரி, தனுஸ்ரீ ஆகியோரின் உடல்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கோரச் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story