Top
undefined
Begin typing your search above and press return to search.

தேசிய நதிகளை சுத்த படுத்தும் திட்டம் - புதிய மசோதா தாக்கல்!

தேசிய நதிகளை சுத்த படுத்தும் திட்டம் - புதிய மசோதா தாக்கல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 4:09 AM GMT


2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவி ஏற்ற உடன் கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கான 20,000 கோடி ருபாய் திட்டத்தை ஏற்படுத்தினார். மேலும் தேசிய நதிகள் சுத்தப்படுத்துவதற்கான நதிகள் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு சட்ட மசோதாவும் இதற்காக வடிவமைக்கப்பட்டது. தற்போது நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இது போன்ற திட்டங்கள் எந்த அளவிற்கு பலன் தருகின்றன என்பதை ஆராய வேண்டும். முன்னர் இது போன்ற திட்டங்கள் போடப்பட்டு அதனால் எந்த பலனும் இல்லாமலேயே போனது, நம் தமிழ் நாட்டிலேயே கூட கூவம் நதியை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு என்ன நிலைமை ஆனது என்று எல்லோருக்கும் தெரியும்.


நதிகள் சுத்தப்படுத்துதல் என்பதில் உள்ள உண்மையை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அரசும், அரசு சாரா அமைப்புகளும் இணைந்து நதிகளை சுத்தப்படுத்தும் திட்டத்தை இதுவரை எப்படி செயல்படுத்தி இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். கங்கை நதி சுத்தப்படுத்தும் திட்டத்தையே எடுத்துக் கொண்டாலும் அந்த பணியை 7 தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து கங்கை மற்றும் யமுனை கரைகளில் 20% மட்டுமே சுத்தம் செய்தன. மெரும்பாலான முதலீடுகள் இதற்காகவே செலவு செய்யப்பட்டது. ஆனால், நதிகளை தூய்மை படுத்துதல் என்பதையும் தாண்டிய ஒன்று. கங்கை நதி மட்டுமே எட்டு கிளை நதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.


மேலும், கங்கை நதியின் வழியில் மட்டும் 1000 அணைகள் இருக்கின்றன, இது கிளை நதிகளின் இயல்பான வேகத்தை குறைகின்றன. மேலும் சுரங்கங்கள், மணல் அள்ளுதல், அளவிற்கு அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சுதல் போன்றவை நதியை பாதிக்கின்றன.


ஆகையால் நதிகள் சீரமைப்பில் முதலில் கடைபிடிக்க வேண்டியது நதிகளின் வழித்தடத்தில் இனி எந்த கட்டமைப்பும் அனுமதிக்க மாட்டாது என்றும், நதிகளின் ஓரத்தில் சுரங்கங்களோ மணல் அள்ளுதலோ அல்லது நிலத்தடி நீர் உறிஞ்சுவதையோ கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். இதன்பிறகே, மற்ற அத்தியாவசிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நதிகள் சுத்தப்படுத்துதல் என்றாலே கரை ஓரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றுவது என்கிற அளவில் தான் இன்றைக்கு பல அரசு சாரா நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.


ஆனால், தென் இந்தியா குறிப்பாக தமிழகத்தை பொறுத்த வரை இந்த பிரச்சனை இல்லை. இங்கு அரசும், அரசு சாரா அமைப்புகளும் நதிகளில் தண்ணீர் வருவதற்கு பல கோடி ரூபாய் செலவில் திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.


Next Story