Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, நாளை சென்னை வருகை!

பா.ஜ.க தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, நாளை சென்னை வருகை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 12:42 PM GMT


பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, நாளை சென்னை வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.


இதுதொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


நாளை (30-ஆம் தேதி) பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர், திருவள்ளூர் சென்று அங்கு திருவள்ளூர் மாவட்ட பஜக தலைமை அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.


அதன்பிறகு, காணொளி மூலம் 15 பாஜக மாவட்ட தலையை அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


அதனைத்தொடர்ந்து, பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் மாநில உயர்மட்டக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் ஜேபி நட்ட கலந்து கொள்கிறார்.


இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.


Next Story