Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐதராபாத்தில் கொடூரம்! பெண் டாக்டர் எரித்துக் கொலை - ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது!! #JusticeForPriyankaReddy!

ஐதராபாத்தில் கொடூரம்! பெண் டாக்டர் எரித்துக் கொலை - ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது!! #JusticeForPriyankaReddy!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 10:24 AM GMT


ஐதராபாத்தை சேர்ந்த விலங்குகள் நல டாக்டர் பிரியங்கா ரெட்டி (வயது 26). இவர் அங்குள்ள கொல்லம்பூர் அரசு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் கட்சிபவுலிக்கு சென்றபோது அவரது இருசக்கர வாகனம் பஞ்சராகி உள்ளது..அப்போது லாரி டிரைவர் ஒருவர் பஞ்சர் ஒட்டுவதற்கு உதவ முன் வந்துள்ளார். இந்த தகவலை தனது குடும்பத்தினருக்கு மொபைல் மூலம் தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில் இரவு 9 மணிக்கு, தன் சகோதரிக்கு தொடர்புகொண்ட பிரியங்கா ரெட்டி, தொண்டுபள்ளி ஏ.ஆர்.ஆர் டோல்கேட் அருகில் நிற்பதாகவும், வண்டி பஞ்சர் ஆகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு பிரியங்கா ரெட்டியின் மொபைல் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது.


இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், இரவு அந்த டோல்கேட் பகுதிக்கு வந்து பிரியங்காவை தேடியுள்ளனர். அவரை அங்கு காணவில்லை. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் ஷாத்நகர் பகுதியில் ஒரு பாலத்தின் கீழ் இளம் பெண் ஒருவரின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் அது பிரியங்கா ரெட்டி என்பது உறுதி செய்யப்பட்டது.


பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மற்றும் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


இந்தநிலையில் பிரியங்கா ரெட்டி கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.


அவர்கள் #JusticeForPriyankaReddy எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி வருகின்றனர்.


Next Story