Top
undefined
Begin typing your search above and press return to search.

காசியில் சமஸ்க்ரிதம் தெரிந்த ஒரு ஹிந்து கூட இல்லையா??

காசியில் சமஸ்க்ரிதம் தெரிந்த ஒரு ஹிந்து கூட இல்லையா??

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 3:56 AM GMT


சமீபத்தில் காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பொறுப்பேற்க வந்த முனைவர் பிரோஸ் கானுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஹிந்து பல்கலைக்கழகத்தில் முஸ்லீம் பேராசிரியர் அமர்த்தப்படுவது ஏற்புடையதல்ல என்பதின் அடிப்படையில் அவர்க்கு எதிர்ப்பு காட்டப்பட்டது, இந்தியாவின் "செக்யூலர்(மதசார்பற்ற)" பத்திரிகைகள் இது மதத்வேஷம் என்றும், மதச்சார்பின்மைக்கு சகிப்பு தன்மைக்கும் எதிரானது என்றும் தலையங்கங்கள் எழுத ஆரம்பித்து விட்டன. ஆனால் சில வருடங்களுக்கு முன், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தானின் தந்தை யான முகம்மது அலி ஜின்னாவின் புகைப்படத்தை வைத்ததற்கு எந்த பத்திரிகைகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் ஜின்னா அந்த பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர் இல்லை, அந்த பல்கலைகழகத்தில் பணி புரிந்தவரும் இல்லை. "பிறகு ஏன் அவர் படத்தை அங்கு வைக்க வேண்டும்?" என கேட்க்க ஒருவர் கூட இல்லை.


இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையும் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம் முழுமையாக ஆதரித்து வந்தது. பாகிஸ்தான் என்கிற கோட்பாட்டிற்கான போராட்டங்களை அன்றைய காலக்கட்டங்களில் முன்னெடுத்தாதே அலிகர் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தான். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பித்த போது பண்டிதர் மதன மோகன் மாளவியா பேசியதை நினைவு கூறச்சொல்லும் பத்திரிக்கைகள், ஜின்னாவையும் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தையும் மறந்து விட்டன.


முனைவர் பிரோஸ் கான் மிகச்சிறந்த சமஸ்க்ரித அறிஞர் தான், ஆனாலும் இஸ்லாமிய மார்க்க அறிஞராக இல்லாத எவரையும் அரபு பயிலும் அரபு மொழி பயிற்றுவிக்க தகுதியானவராக நினைக்கப்போவதில்லை. மேலும் பிரோஸ் கான் சமஸ்க்ரித பாடம் எதுவும் நடத்த போவதில்லை என்றும் காசி இந்து பல்கலைக்கழகத்தின் இலக்கிய பிரிவில் நியமிக்கப்பட்டிருக்கிறர் என்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் நியமனத்தை திரும்ப பெற போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார்கள். இது போன்ற முயற்சிகளை அதுவும் இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் பல்கலைக்கழக நிர்வாகம் ஏன் செய்கிறது என்று தெரியவில்லை. மாணவர்கள் போராட்டமும் தொடர்கிறது.


இந்து முஸ்லீம் சகோதரத்துவத்தை வலியுறுத்த ஆயிரம் வழிகள் இருக்கும் போது, இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும் இது போன்ற நியமனங்கள் நடப்பது வழக்கம் தான் என்றாலும், இதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் மாணவர்கள் இருக்கும்போது, பல்கலைக்கழகம் பிடிவாதம் பிடிப்பது இந்த சாதாரன பிரச்னையை இந்து முஸ்லீம் பிரச்சனையாக மாற்ற வழி செய்து விடும். என்றாலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இலக்கிய பிரிவிற்கு ஒரு ஹிந்து சமஸ்க்ரித பேராசிரியர் கூட கிடைக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது.


Next Story