Top
undefined
Begin typing your search above and press return to search.

முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே!

முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 3:34 AM GMT


இலங்கையின் 8-வது அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு கோத்தபய ராஜபக்சே இரு நாடுகளும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன, எனத் தெரிவித்தார். "நட்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் உங்களை சந்திக்கவும் நான் எதிர்நோக்குகிறேன்" என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருந்தார்.


இந்தியாவுக்கு வருமாறு அவருக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கிடையே, இலங்கை அதிபராக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபக்சே இந்தியா வரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார்.




https://twitter.com/GotabayaR/status/1200084460676378624?s=20


டெல்லி விமான நிலையம் வந்தடைந்த கோத்தபய ராஜபக்சேவை மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.




https://twitter.com/janusmyth/status/1200030939700588545?s=20

Next Story