Top
undefined
Begin typing your search above and press return to search.

“தமிழக மீனவர்களின் படகுகள் உடனே விடுவிக்கப்படும்” - இலங்கை அதிபர் கோத்தபய அறிவிப்பு!

“தமிழக மீனவர்களின் படகுகள் உடனே விடுவிக்கப்படும்” - இலங்கை அதிபர் கோத்தபய அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 10:47 AM GMT


கடந்த சில ஆண்டுகளாக கடலில் எல்லையை தாண்டி செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.


கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டு வந்தாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையிலேயே வைக்கப்பட்டுள்ளன. இந்த படகுகளை விடுவிக்க வேண்டுமென்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை இலங்கை அரசு அந்த படகுகளை விடுவிக்க வில்லை.


இந்த நிலையில் இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே, நேற்று டெல்லி வந்தார். அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், “தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் உள்பட அனைத்து இந்திய மீனவர்களின் படகுகளும் உடனே விடுவிக்கப்படும்” என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.


இந்த அறிவிப்புக்கு, தமிழக மீனவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.


Next Story