Top
undefined
Begin typing your search above and press return to search.

நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிக்கொடிகட்ட வேண்டுமா.? அப்போ இவற்றை கட்டுபடுத்துங்கள்!

நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிக்கொடிகட்ட வேண்டுமா.? அப்போ இவற்றை கட்டுபடுத்துங்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 7:32 PM GMT


வாழ்வின் சில விஷயங்கள் கட்டுபாட்டுகள் இருக்கவேண்டியவை. நம்மை இயக்குகிறவிஷயங்களை காட்டிலும் நம்மால் இயக்கப்படுகிற விஷயங்களுக்கு மதிப்பு அதிகம்.திசைகளின்றி திக்குகளின்றி எண்ணங்களும் செயல்களும் செல்வதும், செய்வதுமா?வாழ்க்கை. வாழ்வில் எவற்றை எல்லாம் கட்டுபாட்டுக்குள் கொள்ள வேண்டும் என்று அறிந்துகொள்வதே வெற்றியின் சிறந்த கோட்பாடு.


நம் செயல்கள்….. இன்று நாம் விதைப்பதே நாளைய விருச்சம் என்பதை நினைவில்கொள்வோம். செய்யும் செயலுக்கான அறுவடை இன்று இல்லாவிடினும் நாளை நிகழ்ந்தேதீரும். எனவே தெளிந்து செய்வோம். செய்யும் செயல்களில் கட்டுபாடும் விழிப்பும் அவசியம்.


நம் பேச்சு….விளைவுகளை அறிந்த பேச்சே புத்திசாலிமான அணுகுமுறை. எதை பேசுகிறோம்என்ற பிரக்ஞையே இன்றி பேசுவது முட்டாள்தனமான செயல். எனவே உபயோகப்படுத்துகிறவார்த்தை ஒவ்வொன்றிற்க்கும் நம் ஆற்றல், நம் கவனம், நம் அக்கறை அனைத்தையும்செலுத்தி பிரயோகிக்க வேண்டும்.


நம் எண்ணங்கள்….! எண்ணங்கள் நொடி பொழுதில் எழுவதில்லை. நமக்குயெழும் ஒவ்வொறுஎண்ணங்களுக்கு பின்பும் ஆழமான மனத்தடங்கள் இருந்தேயிருக்கின்றன. நமக்குள் ஆழபதிந்த ஏதொவொன்று தான் இன்றைய எண்ணமாக உதித்திருக்கிறது என்பதே உண்மை.எனவே எண்ணத்தில் கட்டுபாடு மிக அவசியம்நம் தொடர்புகள்…. “வாத்து கூட்டத்தின் நடுவே நின்று கொண்டு கழுகை போல் கம்பீரமாககரையவேண்டும் என்று நினைப்பது கடினமானது” என்ற பழமொழியை நினைவுப்படுத்தவேண்டியுள்ளது. காரணம் நாம் யாரென்பதை உலகுக்கு உணர்த்த நாம் யாருக்கு மத்தியில்இருக்கிறோம். எந்த மாதிரியான நண்பர்கள், துணைவர்கள், உறவுகளை கொண்டிருக்கிறோம்என்பதில் கட்டுபாடும் கவனமும் தேவை.


நம் ஆரோக்கியம்…..சுவரின்றி சித்திரம் வரைதல் எளிதா என்ன? உடல் ஆரோக்கியம் என்றஅடித்தளத்தில் கட்டுபாட்டுடன் இருத்தலே முழுமையான வெற்றியை பெற்று தரும்.


நம் நேரம்…அனைவருக்கும் கடவுள் எந்த பாரபட்சத்தையும் காட்டவில்லை. அனைவருக்கும்24 மணிநேரமே…அதில் ஒவ்வொறு தருணத்தையும் எப்படி செலவிடுகிறோம் என்ற கவனமும்,அக்கறையுமே நேரத்தையும், நேர்த்தியான வெற்றியையும் நம் வசப்படுத்தும்.


நம் நற்பெயர்…நம் வருங்கால தலைமுறைக்கு எதை விட்டு சென்றோம் என்பது வரலாறு. அதுசொத்தாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை நல்லெண்ணங்களை, நல்லறிவை,நற்செயல்களை, தெளிந்த சிந்தனைகளை விட்டு செல்ல நம் செயல்களும் சொற்களும்கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.


Next Story