Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.கவுக்கு ஆதரவு அளிக்கத் தயார்! குமாரசாமி திடீர் அறிவிப்பு! வேண்டாம் என எடியூரப்பா மறுப்பு!

பா.ஜ.கவுக்கு ஆதரவு அளிக்கத் தயார்! குமாரசாமி திடீர் அறிவிப்பு! வேண்டாம் என எடியூரப்பா மறுப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 10:30 AM GMT


கர்நாடக மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 5-ந் தேதி 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளை பாஜக கைப்பற்ற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும் வாய்ப்பு உள்ளது என முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.


இந்த நிலையில் நேற்று விஜயநகராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் குமாரசாமி பேசுகையில் “ கர்நாடகாவில் மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் வருவதை யாரும் விரும்பவில்லை. மக்கள் மீது மற்றொரு தேர்தலை சுமத்த நாங்களும் விரும்பவில்லை. எனவே இந்த இடைத்தேர்தலில் தேவையான இடங்களைப் பெற பாஜகவால் முடியாவிட்டால் கூடபாஜக ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றார்.


ஆனால் எடியூரப்பா இதை ஒப்புக் கொள்ளவில்லை. எங்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் இலட்சியம். அதேபோல காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை உருவாக்குவதே எனது இலட்சியம் என்றார். எனவே இவர்கள் ஆதரவு எங்கள் ஆட்சிக்கு தேவைப்படாது என்றார்.


Next Story