Top
undefined
Begin typing your search above and press return to search.

மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ள ஆட்சி ‘வளர்ச்சிக்காக வாக்களித்த மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சி’ ; ஜி.கே.வாசன் கருத்து!

மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ள ஆட்சி ‘வளர்ச்சிக்காக வாக்களித்த மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சி’ ; ஜி.கே.வாசன் கருத்து!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 12:05 PM GMT


ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " மகாராஷ்டிர மாநிலத்திலே அமைந்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி முரண்பாடுகளின் மொத்த உருவம். முதல்வர் பதவி என்ற ஒன்றுக்காக சிவசேனா கட்சி, காங்கிரசுடன் இணைந்து தங்களுடைய மொத்த வடிவத்தையும் இழந்துள்ளார்கள்.


காங்கிரசம் ஆட்சி அதிகாரத்திற்காக ஆசைப்பட்டு, தங்களுடைய கொள்கைகளை காத்தாடி போல பறக்கவிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இந்திய அளவில் சிறுபான்மை மக்களுடைய நம்பகத்தன்மையை இழந்திருக்கிறார்கள்.


அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒருபக்கம் பாஜகவுடனும் பேசி, இன்னொரு பக்கம் சிவசேனாவுடனும் பேசி தங்களுடைய பதவியை உறுதி செய்து கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த ஆட்சி மகாராஷ்டிர மாநில மக்களால் விரும்பி வாக்களித்த கூட்டணி ஆட்சி அல்ல. சந்தர்ப்பவாத ஆட்சியாகவே அமைந்திருக்கிறது.


மாநில வளர்ச்சிக்காக மகாராஷ்டிர மக்கள் அளித்த வாக்குக்கு எதிராக இன்றைக்கு அமைந்திருக்கும் கூட்டணி ஆட்சி பரிசோதனைக் களமாக அமைந்திருப்பது வேதனையான ஒன்று. மக்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து பயனற்ற ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளே ஆட்சியினுடைய நிலையற்ற தன்மையை விரைவில் நிரூபிக்கும்.


பாஜக எதிர்க்கட்சியாக தனிப்பெரும் கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலில் அவர்களை நம்பி எடுத்த முடிவு ஏற்புடையதல்ல. பதவி சுகத்திற்காக ஒரு கூட்டணி ஆட்சி அமர்ந்திருக்கிறது. இதன் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியதாகவே இருக்கிறது. என்றாலும் மாநில மக்களுக்கும், வளர்ச்சிக்கும் நன்மை நடக்க வேண்டும் என்பது மட்டுமே தமாகாவின் எதிர்பார்ப்பாகும்" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


Next Story