Top
undefined
Begin typing your search above and press return to search.

கர்நாடகாவில் உருளும் காங்கிரஸ் கூட்டணியின் தலை - குறி வைத்து தூக்கப்பட்ட முக்கிய புள்ளிகள்!

கர்நாடகாவில் உருளும் காங்கிரஸ் கூட்டணியின் தலை - குறி வைத்து தூக்கப்பட்ட முக்கிய புள்ளிகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 6:59 PM GMT


கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையா மற்றும் குமாரசாமி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கடந்த மார்ச் மாதம் வருமான வரித் துறை நடத்திய சோதனையின்போது தங்களது முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியை பயன்படுத்தி தங்களை பணி செய்யவிடாமல் செய்ததாக புகார் எழுந்தது இந்நிலையில் பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக கூறி கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் சித்தராமையா, குமாரசாமி, முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா, முன்னாள் அமைச்சர் சிவகுமார் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் சுனில் குமார் ஆகியோர் மீது தேச துரோக வழக்கான 20IPC இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் சிவகுமார் இதையெல்லாம் நாங்கள் எதிர்கொள்ளத் தயார் இதெல்லாம் அரசியல் நோக்கத்திற்காக பாஜக நண்பர்களும் மற்றும் அதிகாரிகளும் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது நாங்கள் சிறை செல்லவும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.


Next Story