Top
undefined
Begin typing your search above and press return to search.

கட்டுக்குள் வந்தது கடல் பரப்பு - சீனாவை நிலைகுலையச் செய்த பிரதமர் மோடியின் இராஜதந்திர நடவடிக்கை - இந்தியாவோடு கை கோர்த்த இலங்கை!

கட்டுக்குள் வந்தது கடல் பரப்பு - சீனாவை நிலைகுலையச் செய்த பிரதமர் மோடியின் இராஜதந்திர நடவடிக்கை  - இந்தியாவோடு கை கோர்த்த இலங்கை!

MuruganandhamBy : Muruganandham

  |  29 Nov 2019 3:42 PM GMT


இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே ரத்து செய்துள்ளார். கொஞ்சமும் எதிர்பாரா ஆச்சரியாமன விஷயம் இது.


கடந்த 2017ம் ஆண்டில் அதிபர் சிறிசேனா அரசு செயல்பட்டது. சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கையெழுத்திட்டார். இந்த துறைமுகத்தை போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக சீனா மாற்றலாம் என்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த மாதம் கூட ஒரு சில உளவு கப்பலை சீனா இலங்கைக்கு கொடுத்திருந்தது. அதுவும் அப்பக்கம் சுற்றுகின்றது


சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்றால் இந்த குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். அதன்படி, அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய, ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளார்.


கோத்தபாய டெல்லியில் இருக்கும் பொழுது இந்த அறிவிப்பு வந்திருப்பது சீனாவுக்கு இந்தியா கொடுத்த அடியாக பார்க்கப்படுகிறது. இந்த துறைமுகம் மகிந்த காலத்தில் அதாவது இந்தியாவில் காங்கிரஸ் அரசு இருந்தபொழுது சீனாவுக்கு கொடுக்கபட்டது, அதை தடுக்க காங்கிரஸ் அரசு நினைக்கவில்லை. மோடி அரசு அதை செய்து மீட்டிருகின்றது


Next Story