Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒரு ஏக்கரில் கஞ்சா வளர்த்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி!

ஒரு ஏக்கரில் கஞ்சா வளர்த்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 9:30 AM GMT


கரூர் மாவட்டம் குளித்தலை, கடவூர் வட்டார காங்கிரஸ் தலைவராக இருப்பவர் அருணாச்சலம். இவர், கடவூர் அருகே உள்ள மைலம்பட்டி கிராமத்தில் ஒரு ஏக்கர் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து உள்ளார். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். கஞ்சா செடிகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.


இந்த நிலையில், இதுபற்றி திருச்சி போதைப் பொருள் தடுப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, சோளம், மல்லிகை பயிர்களின் ஊடே, ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


போலீசார் தோட்டத்தை முற்றுகையிட்டு விசாரணை நடத்தியதை தெரிந்து கொண்ட காங்கிரஸ் வட்டார தலைவர் அருணாச்சலம், தலைமறைவாகி விட்டதார். அவர் தற்போது பெங்களூரில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரை பிடிப்பதற்கு போலீஸ் தனிப்படை விரைந்துள்ளது.


காங்கிரஸ் வட்டார தலைவர் ஒருவர், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story