Top
undefined
Begin typing your search above and press return to search.

“இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்” - இலங்கை அதிபர் கோத்தபய உறுதி!

“இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்” - இலங்கை அதிபர் கோத்தபய உறுதி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 10:16 AM GMT


இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே, முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவரை மத்திய அமைச்சர் விகேசி வரவேற்றார்.


கோத்தபயவுக்கு, ஜனாதிபதி மாளிகையில் இன்று சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரம்ம பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்டு அவரை வரவேற்றனர்.


இதனைத்தொடர்ந்து இலங்கை அதிபர் கோத்தபய, நிருபர்களிடம் கூறியதாவது:-


நான் இலங்கையின் அதிபராக பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளேன். எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனது பதவிக்காலத்தில், இந்தியா-இலங்கை இடையிலான உறவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.


இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, நீண்ட பாரம்பரியம் கொண்டது. இருநாடுகளும் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.


இவ்வாறு கோத்தபய கூறினார்.


Next Story