Top
undefined
Begin typing your search above and press return to search.

நடிகை நமிதா பா.ஜ.க செயல் தலைவர் ஜே .பி. நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்!

நடிகை நமிதா பா.ஜ.க செயல் தலைவர் ஜே .பி. நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 1:13 PM GMT


பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜகவின் செயல் தலைவர்  ஜே .பி. நட்டா ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார்,காலை 10.30 மணி அளவில் ஜே.பி. நட்டா சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் அப்போது அந்தக் கட்சியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,பின்னர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்,திருவள்ளூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பேசிய செயல் தலைவர் ஜே .பி. நட்டா 16 மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட உள்ள பாஜக  அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பின்னர் பாஜக வளர்ச்சி குறித்து கட்சி மாநில நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர்.



காலையில் நடிகர் ராதாரவி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதை தொடர்ந்து தற்போது நடிகை நமீதா பாஜக தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்,சென்ற 2006 சட்டமன்றத் தேர்தலில் நடிகை நமீதா திருச்சியில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து குறிப்பிடத்தக்கது,தற்போது அதிமுகவில் இருந்து விலகி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் நடிகை நமீதா.


Next Story