Top
undefined
Begin typing your search above and press return to search.

ஓட்டுச்சாவடிக்கு துப்பாக்கியுடன் வந்து மிரட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ! வைரலானது வீடியோ!

ஓட்டுச்சாவடிக்கு துப்பாக்கியுடன் வந்து மிரட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ! வைரலானது வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 10:39 AM GMT


மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.


இன்று, முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது, அண் திருப்பதி என்ற காங்கிரஸ் எம்எல்ஏ, கைத்துப்பாக்கியுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். டால்டன்கஞ்ச் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட ‌ கோசியாரா வாக்குச்சாவடிக்கு அவர் துப்பாக்கியுடன் வந்து வாக்காளர்களை காங்கிரசுக்கு ஓட்டு போடும்படி மிரட்டி சென்றார்.


காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ஓட்டுப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வாக்குச்சாவடிக்கு வந்து வாக்காளர்களை காங்கிரசுக்கு ஓட்டு போடுமாறு மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மின்னணு எந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும்போது வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவது கடினம் என்பதால், காங்கிரஸ் எம்எல்ஏ அண் திருப்பதியால் கள்ள ஓட்டுப்போட முடியவில்லை. எனவே அவர் வாக்காளர்களை துப்பாக்கியால் மிரட்டி காங்கிரசுக்கு ஓட்டு போடும்படி கூறியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.




https://twitter.com/amitmalviya/status/1200695677946388481


இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story