Top
undefined
Begin typing your search above and press return to search.

டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து, உயிரோடு எரித்துக் கொலை! நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவேசம்!

டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து, உயிரோடு எரித்துக் கொலை! நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவேசம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 9:38 AM GMT


ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டி என்ற 26 வயது டாக்டர், 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த கற்பழிப்பு கும்பலின் தலைவனாக முகமது பாஷா என்பவன் செயல்பட்டுள்ளார்.


டாக்டர் பிரியங்கா ரெட்டியின் கொடூர கொலைக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேசும் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-


ஐதராபாத்தில் டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழிக்கப்பட்டு உயிரோடு எரித்த சம்பவம், என் இதயத்தை சுக்குநூறாக நொறுங்கியது. இதுபோன்ற சம்பவங்கள், நாளுக்கு நாள் பயத்தை அதிகரித்து வருகிறது. மிகவும் பாதுகாப்பான நகரம் என்று நான் ஹைதராபாத்தை நினைத்து இருந்தேன். அங்கு நடந்துள்ள இந்த சம்பவம் என்னை பயம் கொள்ள செய்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து நான் கேள்விப்பட்டதும், எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், பாதுகாப்பாக ஒரு பெண் போய், வரும் நிலையில் நமது நாடு எப்போது மாறும்? டாக்டர் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து உயிரோடு எரித்த சைக்கோ கும்பலை, உடனே பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.




https://twitter.com/KeerthyOfficial/status/1200277958096646144


 இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story