Top
undefined
Begin typing your search above and press return to search.

வரும் ஜனவரி-15 முதல் தங்க நகைகளை ஹால்மார்க் செய்வது கட்டாயமாகிறது! அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அதிரடி அறிவிப்பு!

வரும் ஜனவரி-15 முதல் தங்க நகைகளை ஹால்மார்க் செய்வது கட்டாயமாகிறது! அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அதிரடி அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 9:19 AM GMT


தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருள்களின் தூய்மை மற்றும் தரத்தை உறுதி செய்யும் வகையில் வரும் 2020 ஜனவரி 15 ந்தேதி முதல் தங்க பொருள்களை ஹால்மார்க் செய்வது கட்டாயமாகிறது என்று மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் பாஸ்வான், இந்தியாவில் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களின் தூய்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவைகள் மீது ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது, இதற்காக நுகர்வோர் விவகாரத் துறை மூலம் ஒரு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் இதன் மூலம் புதிய மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் ஆகியவற்றை உறுதி செய்து கொள்வதற்கான அவகாசம் ஒரு வருட காலம் வழங்கப்படும் என்றார். இதற்காக தேவைப்படும் இடங்களில் தனியார் தொழில்முனைவோர்களால் தரம் மற்றும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என்றார்.


நகைக்கடை விற்பனையாளர்கள் தங்கள் பதிவு செயல்முறையை முடிக்க ஒரு வருட கால அவகாசம் கிடைக்கும், மேலும் சில்லறை விற்பனையாளர்களும் தங்களின் தற்போதைய முந்தைய முறைகளை நீக்கிக் கொள்ள ஒரு வருட கால அவகாசம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு நிர்ணயிக்கும் தூய்மை மற்றும் தரத்தை சரியான முறையில் பரிசோதிக்க வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள ஏழை மக்களுக்கும் இது பயனளிக்கும் என்று அமைச்சர் கூறினார்.


உலக தங்க கவுன்சில் (WGC) இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. மேலும் அரசின் இந்த நடவடிக்கை நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் இருவருக்கும் பயனளிக்கும் என்று கூறினர். கவுன்சிலின் இந்திய நிர்வாக இயக்குனர் பி.ஆர் சோமசுந்தரம் கூறியதாவது: " காலதாமதம் ஆனாலும் இது சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த நடவடிக்கையாகும். இது தங்கத் தொழிலின் மீது மீண்டும் நம்பிக்கையை கொண்டு வரும். நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு ஒரே மாதிரியாக பயனளிக்கும். வெளிப்படைத் தன்மை கொண்ட சூழலில் எங்கள் புகழ்பெற்ற நகைக் கைவினைத் திறன்களை சந்தைப்படுத்த மிகவும் உதவும்" என்றார்.


Translated Article From SWARAJYA


Next Story