Top
undefined
Begin typing your search above and press return to search.

சட்டக்கல்லூரி மாணவி, துப்பாக்கி முனையில் கற்பழிப்பு! 12 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

சட்டக்கல்லூரி மாணவி, துப்பாக்கி முனையில் கற்பழிப்பு! 12 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 7:52 AM GMT


ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே சங்கிராம்பூர் பகுதியிலுள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் 25 வயது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் சட்டக் கல்லூரி மாணவியை கடத்தி சென்றது.


அந்தக் கும்பல் சென்ற மோட்டார் சைக்கிள் பெட்ரோல் காலியானதால், அவர்கள் தங்களின் நண்பர்களுக்கு மொபைலில் தகவல் தெரிவித்து கருடன் வர வைத்தனர். பின்னர் அந்த சட்டக் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் ஒருவர் பின் ஒருவராக கற்பழித்துள்ளனர்.


இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 12 பேர் கொண்ட அந்த கற்பழிப்பு கும்பலை கைது செய்தனர்.


சுனில் முண்டா, குல்தீப் ஓரான், சுனில் ஓரான், சந்திப் திற்கே‍, அஜய் முண்டா, ராஜன் ஓரான், நவீன் ஓரான், அமன் ஒரான்‍, பசந்த் கட்சாப், ரவி ஓரான், ரோகித் ஓரான், ரிஷி ஓரான் ஆகிய 12 பேரும் சட்டக் கல்லூரி மாணவியை கற்பழித்ததை ஒத்துக்கொண்டனர்.


கார், பைக்கள், துத்துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், 8 மொபைல் போன்கள், மாணவியின் உடைக்கப்பட்ட மொபைல் போன் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 12 பேர் மீதும், கடத்தல் மற்றும் கற்பழிப்பு போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Next Story