Top
undefined
Begin typing your search above and press return to search.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் திடீர் சோதனை!

என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் திடீர் சோதனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 9:59 AM GMT


தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,திருச்சி, கே.ஆர்.எஸ். நகரில் வசித்து வரும் ஜாபர் மற்றும் சர்புதீன் என்பவர்கள் சந்தேகப்படும் விதமாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் குறித்த தகவல்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ததாக கூறப்படுகிறது.


என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம், எர்ணாகுளம் வழங்கிய வாரண்டுகளின் அடிப்படையில் தஞ்சாவூர் மற்றும்  திருச்சிக்கு இன்று காலை 10 மணிக்கு அவர்கள் வீட்டிற்கு சென்ற காவல் ஆய்வாளர் பிராங்கோ தலைமையிலான அதிகாரிகள் சர்புதுன், ஜாபர் வீடுகளில் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் இருவரும் பயன்படுத்திய லேப்டாப், செல்போன், பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.




https://twitter.com/DDNewsLive/status/1200688243416526848?s=19


இருவரையும் கே.கே. நகர் சமூதாய கூடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கடந்த அக்டோபர் மாதம் இனாம்குளத்தூரில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனையின் போது கைதானவர் அளித்த தகவலின் பேரிலும்  இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story