Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்களை இழிவாக பேசிய ராதாரவியை, பாஜகவில் சேர்ப்பதா? – எதிர்ப்பு வலுக்கிறது!

பெண்களை இழிவாக பேசிய ராதாரவியை, பாஜகவில் சேர்ப்பதா? – எதிர்ப்பு வலுக்கிறது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 12:50 PM GMT


நடிகர் ராதாரவி பெண்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, நடிகை நயன்தாராவை கேவலமாக பேசி, சர்ச்சையில் சிக்கினார்.


பாஜக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பெண்களை இழிவாக பேசிய ராதாரவியை வன்மையாக கண்டித்தனர். அப்போது அவர் சார்ந்திருந்த திமுக, அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது.


இதன்பிறகு ராதாரவி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அங்கு அவர் சில மாதங்கள் இருந்தார்.


இந்த நிலையில் இன்று நடிகர் ராதாரவி, பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று (29.11.2019) சென்னைக்கு வந்தார். அவர் முன்னிலையில் ராதாரவி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.


பாஜகவில் நடிகர் ராதாரவியை சேர்த்துக் கொண்டதற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராதாரவி என்ற ஹேஸ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ராதாரவியை சேர்த்துக்கொண்ட பாஜகவை, பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


பாஜகவில் நடிகர் ராதாரவியை சேர்த்துக் கொண்டதற்கு, பாடகி சின்மயி தனது, கண்டனத்தை டுவிட்டர் பக்கம் மூலம் பதிவு செய்துள்ளார்.




https://twitter.com/Chinmayi/status/1200653762068529153


மேலும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் சின்மயி தனது புகாரை ட்விட்டர் மூலம் அனுப்பி உள்ளார்.




https://twitter.com/Chinmayi/status/1200678282212999168


பெண்களைத் தொடர்ந்து இழிவாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து வருகின்ற ராதாரவியை, பெண்களை தெய்வமாக போற்றும் பாஜகவில் எப்படி சேர்க்கலாம்? என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.


ராதாரவியை பாஜகவில் சேர்த்துக்கொண்டது, பாஜக தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ப்தியை ஏற்படுத்தி  உள்ளது.


Next Story