Kathir News
Begin typing your search above and press return to search.

மஹாராஷ்ட்ராவில் சரத் பவார் ஆடிய டபுள் கேம்! பா.ஜ.க ஆட்சி அமைக்க அவர் முன் வைத்த இரண்டு ரகசிய நிபந்தனைகள் அம்பலம்!

மஹாராஷ்ட்ராவில் சரத் பவார் ஆடிய டபுள் கேம்! பா.ஜ.க ஆட்சி அமைக்க அவர் முன் வைத்த இரண்டு ரகசிய நிபந்தனைகள் அம்பலம்!

மஹாராஷ்ட்ராவில் சரத் பவார் ஆடிய டபுள் கேம்! பா.ஜ.க ஆட்சி அமைக்க அவர் முன் வைத்த இரண்டு ரகசிய நிபந்தனைகள் அம்பலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 7:21 AM GMT


மஹாராஷ்ட்ராவில் பாஜக அதிக இடங்களைப் பெற்று முதல் கட்சியாக வெற்றி பெற்று இருந்தாலும் கூட்டணி கட்சியான சிவசேனா வெளியேறி கொள்கைக்கு பொருந்தாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்தது. தற்போது தனது முதல்வர் கனவையும் நிறைவேற்றிக் கொண்டது.


முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான அஜித்பவார் தன்பக்கம் 30 முதல் 35 எம்எல்ஏ க்கள் வரை உள்ளதாகக் கூறி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வந்தார். பாஜக முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர்.


இந்த சம்பவத்துக்கு முன்பு வரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தங்கள் கட்சியின் முழுமையான ஆதரவை பாஜகவுக்கு தந்து மஹாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்க பாஜக மேலிடத்துடன் சில நிபந்தனைகளை விதித்தார் என்றும், ஆனால் பாஜக அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாததால்தான் சிவசேனா பக்கம் தாவியதாகவும் அது வரை சரத்பவார் பாஜக மற்றும் சிவசேனா 2 கட்சிகளுடன் மாறி, மாறி பேசி வந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.


சரத் பவார் பாஜகவிடம் வைத்த நிபந்தனைகள் இதுதான் என ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஐ.ஏ.என்.எஸ் செய்தி ஸ்தாபனம் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது:


முதலாவதாக தனது மகள் சுப்ரியா சூலே தேசிய அளவில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக விவசாயத்துறை கேபினட் அமைச்சர் துறையை விரும்பிக் கேட்டார். இரண்டாவதாக தேவேந்திர ஃபட்னாவிஸைத் தவிர வேறு யாராவது மகாராஷ்டிராவின் முதல்வராக ஆக வேண்டும் என்று அவர் விரும்பினார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி இரு கோரிக்கைகளையும் நிராகரித்தார்.


விவசாய அமைச்சகத்தை என்.சி.பிக்கு வழங்க முடிவு செய்தால், தனது கூட்டணியில் முக்கிய பங்கு வைக்கும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) ரயில்வே அமைச்சகத்தை கோரும் என்று கருதி பாஜக தரப்பில் முதல் நிபந்தனையை ஏற்கவில்லை. ஏனெனில் இதன் மூலம் 2 பெரிய துறைகளை இழக்க வேண்டும் என்பதால் அந்த நிபந்தனையை பாஜக ஏற்கவில்லை.


அடுத்ததாக பவாரின் இரண்டாவது கோரிக்கையைப் பொருத்தவரை, ஃபட்னவிஸை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற மோடியோ அல்லது அமித்ஷாவோ கடைசி வரை முன்வரவில்லை. ஏன் எனில் ஃபட்னவிஸை பொறுத்தவரை சென்ற 5 ஆண்டுகளை சிறப்பாக பூர்த்தி செய்தார். மக்களிடையே சிறந்த நிர்வாகி என பெயர் எடுத்தார். அவர் மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. பிரச்சாரத்தின் போதும் மோடி, அமித்ஷா ஆகியோர் பாஜக வெற்றி பெற்றால் ஃபட்னாவிஸ் தான் முதல்வர் என திட்டவட்டமாக கூறினர். பெரும்பாலான மக்களும் வாக்களித்தனர். எனவே பவாரின் 2 வது நிபந்தனையை பாஜக ஏற்கவில்லை.


பவார் மேற்கண்ட தனது 2 கோரிக்கைகள் குறித்தும் பாஜக, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு செய்தி அனுப்பியதாக அந்த செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் பாஜகவுக்கு எதிராக பவார் எந்தவொரு வலுவான கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது .


அவரது கோரிக்கைகள் குறித்து பாஜகவிடம் சாதகமான சமிக்ஞைகள் எதுவும் இல்லை என்பதால், பவார் சென்ற நவம்பர் 20 அன்று ‘விவசாயிகள் பிரச்சினை’ என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் மோடியுடன் 45-50 நிமிட நீண்ட சந்திப்பை நடத்தினார். ஆனால் கூட்டத்தின் போது மோடி அவரது கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை. இந்த நிலையில்தான் நவம்பர் 22 அன்று, சரத் பவாரின் மருமகனும், மூத்த என்சிபி தலைவருமான அஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவை வழங்கினார். பாஜகவை ஆதரிக்கத் தயாராக இருந்த சுமார் 30-35 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அஜித் பவார் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.


ஷரத் பவார் தனது மருமகனின் நடவடிக்கைக்கு மறைமுக ஒப்புதல் அளித்ததாகவும் ஊகிக்கப்பட்டது, ஆனால் நிபந்தனைகள் ஏற்கபடாத பட்சத்தில் "மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் அரசாங்கத்தை ஆதரிக்க அஜித் பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) முடிவு அல்ல.


அவரது இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம், ”என்று ஷரத் பவார் ட்வீட் செய்திருந்தார்.


ஆரம்பத்தில் சிவசேனா கூட்டணியை முறித்துக் கொண்டால்தான் பாஜக தனது கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ளும் என்று சரத் பவார் நம்பினார், ஆனால் இது நடக்கவில்லை. இறுதியாக, சிவசேனா மற்றும் காங்கிரசுடன் கூட்டாக அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தார். தனது மருமகனையும் மகள் சுப்ரியா சூலே மூலம் திரும்ப அழைத்துக் கொண்டார் என அந்த செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.


நாக்பூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி திலீப் தியோதர் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் , "சங்கத்தில் சரத் பவாரின் கோரிக்கைகள் குறித்து ஒரு சலசலப்பு ஏற்பட்டது, ஆனால் மோடியின் மறுப்பு அதைவிட அதிகமாக இருந்தது. விவசாயிகளின் பிரச்சினை மாநிலத்தின் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும் என்பதால், விவசாய அமைச்சகத்தை தங்கள் அரசியல் நலனுக்கு ஆதரவாக என்.சி.பி. பயன்படுத்திக் கொண்டிருக்கும்.


"இரண்டாவதாக, ஃபட்னாவிஸ் மோடியின் உறுதியான தேர்வாக இருந்தார், எனவே அவரை மாற்றுவதில் எந்த கேள்வியும் எழ இல்லை. பாஜக தனது கோரிக்கைகளுக்கு உடன்படாது என்பதை ஷரத் பவார் இறுதியாக புரிந்து கொண்டபோது, அவர் சேனா மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார்.” என்று கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News