Kathir News
Begin typing your search above and press return to search.

242 கோடி மரங்கள் நட திட்டம் - காவேரி கூக்குரலுக்காக பெங்களூரு முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Dec 2019 12:41 PM GMT

காவேரி கூக்குரல் இயக்கம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 4முன்னாள் ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் குழுவினர்பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இன்று (டிசம்பர் 1) கோவை வந்தனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் அவர்களுக்கு ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் தன்னார்வதொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘பெடல் புஷ்சர்ஸ்’ என்ற பெயரில் செயல்படும்இந்த சைக்கிள் ஓட்டுநர் குழுவில் முன்னாள் ராணுவ வீரர்கள், பெங்களூருவில் உள்ள பாரத்எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் என பல்வேறுதுறைகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு பயணம் தொடர்பாக அக்குழுவைச் சேர்ந்த 63 வயதான திரு.பாலன் அவர்கள்கூறுகையில், “ பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் (நவம்பர் 29) புறப்பட்ட நாங்கள் ஓசூர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பூர், அவினாசி வழியாக சுமார் 350 கி.மீ பயணம் செய்து இங்குவந்துள்ளோம். இதற்கு முன்பு சத்குரு அவர்கள் ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தை தொடங்கியபோதும் நாங்கள் இதுபோன்ற விழிப்புணர்வு சைக்கிள் பயணங்களை மேற்கொண்டோம்.அப்போது மந்த்ராலயா, திருப்பதி, திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கு சைக்கிளில் சென்றுபொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இப்போது, சத்குரு காவேரி கூக்குரல்இயக்கத்தை தொடங்கியுள்ளார். அதற்காக முதல் பயணமாக பெங்களூருவில் இருந்து கோவைவந்துள்ளோம். இது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது” என்றார்.

இந்த விழிப்புணர்வு பயணத்தின் போது அவர்கள் தங்கள் சைக்கிள்களில் விழிப்புணர்வுபதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.காவேரி கூக்குரல் இயக்கம் என்பது தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி நதிக்குபுத்துயிரூட்டவும் அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும்மேம்படுத்துவதற்காகவும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களால்தொடங்கப்பட்டுள்ள ஒரு மக்கள் இயக்கமாகும்.

இவ்வியக்கத்தின் மூலம் கர்நாடகம் மற்றும்தமிழகத்தில் உள்ள காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இரு மாநில அரசுகளுடன்கொள்கை அளவிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

242 கோடி மரங்கள் நட திட்டம் - காவேரி கூக்குரலுக்காக பெங்களூரு முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.!

242 கோடி மரங்கள் நட திட்டம் - காவேரி கூக்குரலுக்காக பெங்களூரு முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News