Top
undefined
Begin typing your search above and press return to search.

வெளிநாடுகளுக்கு சென்று வாழும் உலக மக்களில் இந்தியர்களே முதலிடம்! தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதிலும் தொடர்ந்து இந்தியர்களே சாதனை!!

வெளிநாடுகளுக்கு சென்று வாழும் உலக மக்களில் இந்தியர்களே முதலிடம்! தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதிலும் தொடர்ந்து இந்தியர்களே சாதனை!!

saravanaBy : saravana

  |  1 Dec 2019 12:23 PM GMT


ஐநா அமைப்பின் உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத் துறையின் மக்கள் தொகைப் பிரிவு நேற்று ஒரு புதிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.


அதில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி 17.5 மில்லியன் பேர், அதாவது ஒரு கோடியே 75 இலட்சம் பேர் என்றும், இந்த அளவுக்கு வேறு எந்த நாட்டவரும் வெளிநாடுகளில் வசிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளையும் சேர்ந்த 272 மில்லியன் பேர் அதாவது 27 கோடியே 20 இலட்சம் பேர் தங்கள் தாய் நாட்டைவிட்டு அயல் நாடுகளில் வசிப்பதாகவும், இவர்களில் கிட்டத்தட்ட 66 சதவீதம் பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் என்றும் ‘அனைத்துலக மக்கள் குடியேற்ற கணக்கெடுப்பு 2019’ என்கிற ஐநாவின் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.


வெளிநாடுகளுக்கு சென்று வாழும் இந்தியர்களைப் பொறுத்தவரையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பணத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து இந்தியா முதலாவது இடத்தில் இருந்து வருவதாக உலக வங்கி தகவல் தெரிவித்து உள்ளது.


வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் 2018ல் ஏறக்குறைய US$80 பில்லியன் தொகையை இந்தியாவுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று நேற்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் US$67 பில்லியன் தொகையுடன் சீனா 2- வது இடத்திலும் US$34 பில்லியன் தொகையுடன் மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாடுகள் அடுத்த இடத்திலும் இருக்கின்றன.


இந்தியர்கள் கடந்த மூன்றாண்டு காலமாக குறிப்பிடத்தக்க அளவில் தங்கள் நாட்டிற்குப் பணம் அனுப்பி வருகிறார்கள். 2016ல் இந்த அளவு US$62.7பில்லியன் ஆக இருந்தது.


2017ல் US$65.3 பில்லியனாக அது கூடியது. வெளிநாட்டினர் இந்தியாவுக்கு அனுப்பும் தொகை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 விழுக்காட்டுக்குச் சமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story