Top
undefined
Begin typing your search above and press return to search.

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவனின் விரல் ரேகை காட்டிக் கொடுத்தது-சிறையில் அடைக்க உத்தரவு!

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவனின் விரல் ரேகை காட்டிக் கொடுத்தது-சிறையில் அடைக்க உத்தரவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Dec 2019 12:58 PM GMT



தனது மகன் நீட் தேர்வில் பாசாக வேண்டும் என்பதற்காக மற்றொருவர் தேர்வு எழுதினார் என்பது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார் தந்தை. மேலும் மாணவனின் விரல் ரேகையும் குற்றத்தை நிரூபித்ததால் மாணவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இது தொடர்பாக சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவருடைய மகன் ரிஷிகாந்த் ஆகிய இருவரும் தங்களுக்கு முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.


ஏற்கெனவே ரிஷிகாந்த்தின் விரல் ரேகையும் தேர்வு மையத்தில் பதிவாகி இருந்த விரல்ரேகையும் வேறுபட்டு இருப்பதை தடய அறி வியல் சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, ரிஷிகாந்தின் தந்தை ரவிக்குமார் சிபிசிஐடி போலிசாரின் முன்பு முன்னிலையில் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில் “எனது மகன் ரிஷிகாந்த் நீட் தேர்வை எழுதவில்லை. அவருக்கு பதிலாக வேறு ஒருவர் எழுதினார் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூல விபரத்தை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் ராபின்சன் தெரிவித்தார்.


இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், “பெற்றோர் தங்களின் கனவுகளை நனவாக்கும்பொருட்டு பிள்ளைகளைத் தவறான செயல்களுக்கு உட்படுத்துகின்றனர். இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது. எனவே இவர்களில் யாரேனும் ஒருவர் சிறையில்அடைக்கப்பட வேண்டும்” என கூறினார்.


இதை அடுத்து வரும் செவ்வாய் கிழமை அன்று சிபிசிஐடி போலிசில் சரண் அடைவதாகவும் 60 நாட்கள் வரை பிணை கேட்டு மனுத் தாக்கல் செய்யப் போவதில்லை என்றும் மாணவரின் தந்தை ரவிக்குமார் உறுதி அளித்துள்ளார்.


“எனவே அவரது மகன் ரிஷி காந்துக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 7 நாட்களுக்கு தினந்தோறும் சிபிசிஐடி போலிசில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும். வரும் 3ஆம் தேதி வரை ரவிக்குமாரை கைது செய்ய விதித்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது,” என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story