Top
undefined
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Dec 2019 12:41 PM GMT


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும் இந்தாண்டுக்கான தீபத்திருவிழா முன்னிட்டு கொடியேற்றம் இன்று காலை நடந்தது,கொடியேற்றத்தை காண பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் கோவிலில் குவிய தொடங்கினர். விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வருகிற 7ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 10ந்தேதி ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறத,மகா தீபத்தை காண தமிழ்நாடு, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்,இந்த ஆண்டு மகா தீபத்தை காண 30 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story