Top
undefined
Begin typing your search above and press return to search.

நடிகர் வடிவேலு நடிப்பை நிறுத்தியது ஏன் ? பரப்பு தகவல் வெளியிட்ட அரசியல் தலைவர்!

நடிகர் வடிவேலு நடிப்பை நிறுத்தியது ஏன் ? பரப்பு தகவல் வெளியிட்ட அரசியல் தலைவர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Dec 2019 6:15 AM GMT



சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தினகரன் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


உள்ளாட்சித் தேர்தல் இந்த தடவையாவது நடக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு மற்றும் விருப்பம். உள்ளாட்சி அமைப்புகளில் மறு வரையறை முறையாக இல்லாததால்தான், எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்துவதுதான் ஆட்சியாளர்களின் நோக்கம்.


தினகரனுக்கு பயந்து, விலைபோன ஒருவரை வைத்து பேட்டி கொடுக்க வைத்துள்ளனர் என புகழேந்தியை மறைமுகமாக சாடினார். அவர் அமமுகவை பதிவு செய்யத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். அவருக்கு நீதிமன்றம் குட்டு தான் வைக்கும். விபத்தில் வந்தவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, வெற்றிடத்தை நிரப்பி விட்டோம் எனக் கூறிக் கொள்கின்றனர்.


அமைச்சர்களின் காமெடியைப் பார்த்து சிரிப்[பு நடிகர் வடிவேலு நடிப்பதையே விட்டு விட்டார். அமைச்சர்களின் காமெடியைப் பற்றிக் கூறினால் என் மீது வழக்குத் தொடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story