Top
undefined
Begin typing your search above and press return to search.

ஹாங் காங் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு!

ஹாங் காங் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 11:55 AM GMT


ஹாங் காங்கில்ஆறு மாதங்களாக தொடரும் போராட்டங்களும் அதை தொடர்ந்து
இந்த மாதம் நடைபெற்ற மாகாண சபை தேர்தல் வெற்றியும் உலக மக்களின்
பார்வையை ஹாங் காங் பக்கம் திருப்பி உள்ளது. ஹாங் காங் மக்களின்
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா நாடாளுமன்றத்தின்
சென்ட் சபையில் "ஹாங் காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்ட
மசோதா" நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் படி ஹாங் காங்கின்


தன்னாட்சி சுதந்திரத்தை ஒவ்வொரு வருடமும் உறுதி செய்த பிறகே அதற்க்கு
வர்த்தக சிறப்பு அந்தஸ்து அளிக்க பட வேண்டும் என்பதாகும். ஹாங் காங்கின்
வளர்ச்சிக்கு அமெரிக்கா அளித்துள்ள பொருளாதார சிறப்பு அந்தஸ்தே
காரணமாகும். 2018 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி ஹாங் காங் மற்றும்
அமெரிக்காவிற்கு இடையே ஆனா வர்த்த மதிப்பு 67 பில்லியன் டாலர்கள் ஆகும்.
மேலும் ஹாங் காங்கில் நிகழும் அடக்குமுறைகளுக்கும் மனித உரிமை
மீறல்களுக்கும் காரணமான சீன அரசின் மீது பொருளாதார தடை விதிக்கும்
விதியும் இந்த மசோதாவில் உள்ளது.



இந்த சட்ட மசோதா ஹாங் காங் காவல் துறைக்கான போராட்ட தடுப்பு
உபகரணங்களை ஏற்றுமதி செய்வதையும் தடை செய்திருக்கிறது. சீனாவில்
இதற்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீனாவின் எதிர்ப்பையும் மீறி அதிபர் டிரம்ப்
அந்த மசோதாவில் கையெழுத்திட்டார்.



டிரம்ப் கூறும்போது "சீன மற்றும் ஹாங் காங் இடையே ஆன அமைதி
பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கவும் இரு தரப்பினருக்கிடையே ஆன சுமூகமான
தீர்வு ஏற்படவுமே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக”
தெரிவித்தார். ஹாங் காங் அமெரிக்காவிற்கு மிக முக்கியமான ஒரு
பகுதியாகவும். சீனாவில் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தன்னாட்சி
அதிகாரத்தோடு இயங்கி வரும் ஹாங் கொங்கில் 1300 அமெரிக்க கம்பெனிகளும்
85,000 அமெரிக்கர்களும் இருக்கின்றனர்.


Next Story