Top
undefined
Begin typing your search above and press return to search.

மீண்டும் தடம் மாறுகிறதா பி.சி.சி.ஐ? 2013இல் இருந்து மேட்ச் பிக்சிங் - உள்ளே நடக்கும் மர்மங்கள்!

மீண்டும் தடம் மாறுகிறதா பி.சி.சி.ஐ?  2013இல் இருந்து மேட்ச் பிக்சிங் - உள்ளே நடக்கும் மர்மங்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 2:45 PM GMT


யாராலும் அளிக்க முடியாத மிகப்பெரிய ராட்சசனை கொஞ்சம் கட்டுப்படுத்தி வைத்து பிறகு யாரும் எதிர்பாரதா நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதுபோல் பி சி சி ஐ என்கிற பணம் படைத்த ராட்சசனை யாராலும் அளிக்க முடியாமல் இருந்தது,  2013இல் இருந்து மேட்ச் பிக்சிங், ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அஸோஸியேஷன் ஆரம்பித்ததில் முறைகேடு, கோவாவை சேர்ந்த அலுவலர்கள் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டது போன்ற பல முறைகேடுகளுக்கு  பிறகு நீதிமன்றம் தலையிட்டு இந்த அமைப்பிற்கு வெளிப்படை தன்மை தேவை என்று சில பரிந்துரைகள் செய்ததது , பிறகு லோதா கமிட்டி அறிக்கையும் இந்த அமைப்பு செயல்படும் விதத்தில் பல மாற்றங்களை பரிந்துரை செய்தது.


லோதா காமிட்டியின் மிக முக்கியமான பரிந்துரை என்னவென்றால்


1.  பி சி சி ன் அலுவலர்கள் தொடர்ச்சியாக 2 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்க கூடாது,  2. அமைப்பின் தலைவருக்கும் இதே காலா நிர்ணயம்தான்  . 3. தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பு முறையில் ஒரு மாநிலத்திற்கு ஒரு ஓட்டு மட்டுமே தரப்படும்.  4. ஐ பி எல் எனப்படும் உள்நாட்டு போட்டிகளை நிர்வகிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும். 5.  போட்டியின் போது நடக்கும் பந்தயத்தை சட்டபூர்வமாக நெறிமுகறைபடுத்துவது.  இவை லோதா கம்மிட்டியின் முக்கியமான பரிந்துரைகள.


சமீபத்தில்
பொறுப்பேற்ற கங்குலி எல்லார் மனதிலும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் பிராந்திய அளவிலான கிரிக்கெட் வீரர்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்த போவதாகவும்,
பென்ஷன் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களை விரிவு படுத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டு வெற்றிகரமாக கொல்கத்தாவில் ஒரு பிங்க் கிரிக்கெட் போட்டியையும் நடத்தி காட்டினார், தற்போது பி சி சி ஐ முதல் வருடாந்தர கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னர் நீதிமன்றம் பரிந்துரைத்த சில வழிமுறைகளில் இருந்து விலகி சில முடிவுகள் எடுத்திருப்பதாக செய்திகள்
தெரிவிக்கிறது, உதாரணமாக, ஐ சி சி ன் கூட்டத்தில் பங்கேற்க சி ஏ ஓ விற்கு பதிலாக அலுவலர் ஜே ஷா வை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது, இது விதிகளுக்கு முரணானது, மேலும் பி சி சி இ அதன் சட்டத்தில் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்து சில பிரிவுகள் மாற்றி அமைக்கப்போவதாகவும்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


லோதா
காமிட்டியின் பரிந்துரைகளை முழுவதுமாக பின்பற்றாமல் இதுபோன்ற நடவடிக்கைகளை நிர்வாக தலைவர் எடுப்பது கொஞ்சம் ஏமாற்றத்தை தருகிறது.
சில வருடங்களுக்கு முன் தினம் தினம் ஒரு சர்ச்சையில் வண்ணம் இருந்த பி சி சி ஐ தற்போது ஏற்படும் மாற்றங்களினால் மீண்டும் எதரகாலத்தில் அது போன்ற சர்ச்சைகளில் சிக்கி கொள்ளுமா என்பது கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.


Next Story