Top
undefined
Begin typing your search above and press return to search.

மலரும் நினைவுகள்! விடுதலைப்புலிகளுக்கு தி.மு.க செய்த முதல் துரோகம்!

மலரும் நினைவுகள்! விடுதலைப்புலிகளுக்கு தி.மு.க செய்த முதல் துரோகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 11:01 AM GMT


இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை, பிரபாகரன் உள்பட 7 இளைஞர்கள்தான், முதன் முதலில் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய முதல் போராளிக் குழு.


பிரபாகரன் மிகவும் இளையவர். இதனால் அனைவரும் அவரை தம்பி என்று அழைக்க, அதுவே அவருக்கு புனைப்பெயராகி போனது.


பிரபாகரனின் முன்னோடியான குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை மூவரும் தமிழகம் வந்து இருந்தபோது கருணாநிதி அரசு அவர்களை கைது செய்தது.


“அவர்களை எங்களிடம்  ஒப்படையுங்கள்” என்று இலங்கை அரசு கடிதம் எழுதியதை அடுத்து, அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி முடிவு செய்தார்.


அந்த கால கட்டத்தில் எந்த ஒரு இலங்கை போராளிக் குழுவுக்கும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. பாஸ்போர்ட் இருந்தால் சுதந்திரமாக இங்கு இருக்கலாம் என்ற சூழலில் அவர்களை கருணாநிதி அரசு கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தது மாபெரும் தவறான செயல்.


இந்த துரோகத்தை அன்றைக்கே நிகழ்த்தியவர் திமுக தலைவரும், அப்போதைய முதல்வருமான கருணாநிதி.


அவர்களை இலங்கை அரசிடம் கருணாநிதி ஒப்படைத்ததும், இலங்கை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை, சின்ன சோதி, பெரிய சோதி அனைவரும் வெலிக்கடை என்னும் சிங்கள கைதிகள் மட்டும் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்கள்.


தூக்கு தண்டனை நிறைவேற்றும் முன்பு தனது கடைசி விருப்பமாக “எனது இரு கண்களையும் அகற்றி பார்வை இழந்த இரு தமிழர்களுக்கு பொருத்துங்குங்கள். அந்த இரண்டு கண்களின் வழியே தமிழீழம் மலர்வதை நான் பார்க்க வேண்டும்” என்று கூறினார் குட்டிமணி.


1983-ஆம் ஆண்டு, ஜூலை மாதம்25-ஆம் தேதி சிங்கள பேரினவாத அரசால் சிங்கள கைதிகளுக்கு மதுபானங்கள் வழங்கி, தமிழ் கைதிகள் மேல் திட்டமிட்ட தாக்குதலை கைதிகளை வைத்து அரங்கேற்தினார்கள்.


இந்த திட்டமிட்ட கலவரத்தில் தமிழ் கைதிகள் கொல்லப் பட்டார்கள்.


தன் இரு கண்களால் சுதந்திர தமிழீழம் மலர்வதை பார்க்க வேண்டும் என்று கடைசி ஆசை என்று தெரிவித்த குட்டிமணியின் இரண்டு கண்களும் உயிரோடு பிடுங்கப்பட்டு, ஜெயில் அதிகாரிகள் தங்களின் பூட்ஸ் காலால் அந்த கண்கள் நசுக்கி எறியப்பட்டன.


இந்த கோர நிகழ்வை “கருப்பு ஜூலை” என்று அழைத்து ஒவ்வொரு ஜூலை மாதமும் விடுதலைப்புலிகள் கடைபிடித்து வந்தனர்.


கருணா என்றாலே துரோகம் என்று பொருள் ஆகி போனது.


தமிழகதிற்கு கருணாநிதி, ஈழத்திற்கு கருணா.


Next Story