Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க வின் உண்மையான தொண்டர் யாரையும் புகழமாட்டார்கள்! அரசகுமார் விவகாரத்தில் பா.ஜ.க அதிரடி!

பா.ஜ.க வின் உண்மையான தொண்டர் யாரையும் புகழமாட்டார்கள்! அரசகுமார் விவகாரத்தில் பா.ஜ.க அதிரடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 9:46 AM GMT


புதுக்கோட்டையில்நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார், “எம்ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான். முதல்வர் பதவியை தட்டிப் பறிக்கும் எண்ணம் முக ஸ்டாலினுக்கு இல்லை. ஜனநாயக முறைப்படி அல்லாமல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைத்திருந்தால், கூவத்தூரில் விஷயம் நடந்தபோது அவர் முதலமைச்சராக இருப்பார். காலம் கனியும், மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆவார்” என்று பேசி பாஜக தொண்டர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தினார்.


பாஜக தொண்டர்களால் தெய்வமாக மதிக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடியை, சேடிஸ்ட் என்றும் திருடன் என்றும், மேலும் கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சித்தவர் திமுக தலைவர் மு.மு.ஸ்டாலின்.


அதோடு தொடர்ந்து இந்து மதத்தையும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளையும், சம்பிரதாயங்களையும் ஸ்டாலின் கேலி செய்து வருகிறார் இழிவாக பேசி வருகிறார். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும்கூட அவர், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னதில்லை. ஆனால் அதேநேரம் கிறிஸ்தவ பண்டிகைகள், முஸ்லிம்களின் பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்கிறார். அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதை ஒரு கொள்கையாகவே ஸ்டாலின் ஏற்று நடந்து வருகிறார்.




https://twitter.com/BJP4TamilNadu/status/1201406685950152704


இந்த சூழ்நிலையில் முகஸ்டாலினை மிகவும் புகழ்ந்து பாராட்டி, “அவர் விரைவில் தமிழகத்தின் முதல்வர் ஆவார். நாம் அதையெல்லாம் பார்க்கப் போகிறோம்” என்று அரசகுமார் பேசியது பாஜக தொண்டர் முதல் தலைவர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.




https://twitter.com/CTR_Nirmalkumar/status/1201405431261741056


இதுதொடர்பாக பாஜக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசகுமாரின் நிலைப்பாடு பாஜகவின் நிலைப்பாடு அல்ல என்பதையும், எந்த காலத்திலும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது என்ற கருத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த பாஜக தொண்டர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே இதய தெய்வம் என்பதையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story