Top
undefined
Begin typing your search above and press return to search.

அரசகுமார் நீக்கமா! பாஜக எடுத்த அதிரடி நடவடிக்கை!

அரசகுமார் நீக்கமா! பாஜக எடுத்த அதிரடி நடவடிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 10:11 AM GMT


புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார், “எம்.ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான். முதல்வர் பதவியை தட்டிப் பறிக்கும் எண்ணம் முக ஸ்டாலினுக்கு இல்லை. ஜனநாயக முறைப்படி அல்லாமல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைத்திருந்தால், கூவத்தூரில் விஷயம் நடந்தபோது அவர் முதலமைச்சராக இருப்பார். காலம் கனியும், மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆவார்” என்று பேசி பாஜக தொண்டர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தினார்.


இந்த நிலையில் அரசகுமாருக்கு எதிராக பா.ஜ.கவினர் போர்க்கொடி தூக்கினர்.


பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக நிர்வாகியின் திருமண விழா, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் 1.12.2019 அன்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-





எம்ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின்தான். இயக்கத்திற்காக நன்றி கடன் பட்டவன். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாம் பார்த்து அகம் மகிழ்ச்சி அடைவோம். நான் ஏற்கனவே தி.மு.க கரைவேட்டி கட்டியவன். எப்பொழுது வேண்டுமானாலும் கட்டிக் கொள்வேன். யாரும் கொடுத்து கட்ட வேண்டிய அவசியமில்லை, என்று கூறியுள்ளார்.


அவரின் இந்தப் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசியத் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை, அவர் கட்சியின் சார்பில் எந்தவித நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும், ஊடகங்களிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.


இவ்வாறு அந்த அறிக்கையில் கே.எஸ்.நரேந்திரன் கூறியுள்ளார்.


Next Story