Kathir News
Begin typing your search above and press return to search.

ராமபக்தன்அனுமான் இன்னும் உயிருடன் உள்ளாரா ?? புராணத்தில் இடம்பெற்ற வியப்பூட்டும் தகவல்!

ராமபக்தன்அனுமான் இன்னும் உயிருடன் உள்ளாரா ?? புராணத்தில் இடம்பெற்ற வியப்பூட்டும் தகவல்!

ராமபக்தன்அனுமான் இன்னும் உயிருடன் உள்ளாரா ?? புராணத்தில் இடம்பெற்ற வியப்பூட்டும் தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 1:48 AM GMT


அனுமர் இராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம், ராமரின் தொண்டனாக
பக்தனாக போற்றப்படும் இவருக்கு சிரஞ்சீவி என்று ஒரு பெயர் உண்டு,
அதாவது மரணம் மேற்கொள்ளமுடியாதவர் என்று பொருள். நம் ஆன்மா
அழிவற்றது என்பதும், அது நிரந்தரமானதும் என்பதும் அனைவரும் அறிந்த
உண்மை. இந்து மத தத்துவத்தின் படி சித்த புருஷர்கள் இந்த உடலுடனேயே
யுகங்கள் கடந்து வாழும் சக்திபடைத்தவர்களாக இருப்பவர்கள். அனுமர்
அஷ்டமா சித்திகளை பெற்றவர், அவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்
என்பதை உறுதி செய்ய நம் புராணங்களில் இருந்தே சில தகவல்களை
மேற்கோள் காட்டலாம்.


முதலாவதாக ராமாயண போருக்கு பிறகு அனுமரின் முடிவு அதாவது அவரது
மரணம் பற்றி எந்த தகவலும் இல்லை. இரண்டாவதாக ராமாயணத்தின் அடி
ஒற்றி வந்துள்ள ஆழமான நம்பிக்கை என்னவென்றால் அனுமர் எப்போதுமே
ராம பக்தர்களுக்காக அவர்களின் நல்வாழ்விற்கு பாதுகாப்பிற்கும் இந்த
பூமியில் இருப்பவர் என்பதாகவும். எங்கெல்லாம் ராம நாமம்
சொல்லப்படுகிறதோ, எங்கெல்லாம் ராமாயணம் பாராயாணம்
செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமர் இருப்பர் என்று நம்பப்படுகிறது.


நான்காவதாக இந்தியாவின் பல இடங்களில், மலைகளில் ஏன்
இலங்கையிலும் கூட அனுமரின் கால் தடம் இருக்கிறது, அது அனுமரின்
கால் தடம் தான் என்பது ராம பக்தர்களின் நம்பிக்கை, அந்த இடங்களில்
கோவில் கட்டப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது அங்கெல்லாம் அனுமர் அருள்
இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.


ஐந்தாவதாக மஹாபாரதத்தில் பீமன் ஒரு கானகத்தில் அனுமனை சந்தித்ததாக
வருகிறது, மஹாபாரதம் நடந்தது துவாபர யுகத்தில், ராமாயணமோ த்ரேதா
யுகத்தில் நடந்தது, அப்படி இருக்க அனுமன் எப்படி மஹாபாரத காலத்தில்
இருக்க முடியும் அவர் யுகங்கள் கடந்து வாழும் சிரஞ்சீவியாக இருந்தாலே
ஒழிய இது சத்தியம் எல்லை.


ஆறாவதாக 13இல் இருந்து 16 ஆம் நூற்றாண்டு வரை பக்தி இயக்கம் பெருகிய காலத்தில் வாழ்ந்த பல மகன்கள் ஹனுமனை தரிசித்ததாக சொல்லி இருக்கிறார்கள்,
மதவாச்சாரியார், துளசி தாசர், துறவி ராம தாசர், தற்காலத்தில் சத்யா
சாய் பாபா விற்கும் அனுமர் தரிசனம் தந்ததாக நம்புகிறார்கள்.
தமிழகத்தில் கந்தமதன மலையில் ராமேஸ்வரத்திற்கு அருகில் அவர்
இருப்பதாகவும், இமைய மலை காடுகளில் அவர் வசிப்பதாகவும்
நம்பப்படுகிறது. அனால் அனுமர் எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்க படுகிறதோ அங்கெல்லாம் இருக்கவே செய்கிறார் என்பது ராம பக்தர்களின்
உணர்வுபூர்மான நம்பிக்கை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News