Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடி அரசின் மீது ‘அச்சம்’ அதிகரித்துள்ளதா? தொழிலதிபர் ராகுல் பஜாஜ் பேச்சுக்கு அமித்ஷா அளித்த தெளிவான பதில்கள்!

மோடி அரசின் மீது ‘அச்சம்’ அதிகரித்துள்ளதா? தொழிலதிபர் ராகுல் பஜாஜ் பேச்சுக்கு அமித்ஷா அளித்த தெளிவான பதில்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 7:38 AM GMT



நேற்றும் முன்தினம் மும்பையில் எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் நடத்திய ஒருங்கிணைந்த விருது வழங்கும் விழாவில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இதில் கலந்து கொண்டு பேசிய தொழில் அதிபர் ராகுல் பஜாஜ், "எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. இந்த சூழலை என்னைப்போன்ற தொழில்துறையை சேர்ந்த நண்பர்களும் நன்கு அறிவார்கள். ஆனால், அவர்கள் அதைச் சொல்வதில்லை. நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்," என்றார்.


"ஐக்கிய முற்போக்கு அரசின் இரண்டாவது ஆட்சியின் போது, நாங்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும். அது வேறு. நீங்கள் நன்றாகச் செயல்படுகிறீர்கள். மறுக்கவில்லை. ஆனால், உங்களை விமர்சிக்க எங்களுக்கு ஒருவித அச்சம் இருக்கிறது. உங்களை விமர்சித்தால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள். அது சரியாக எடுத்துக் கொள்ளப்படுமா என்ற அச்சம் அது" என்றார்.


மேலும் அதே நிகழ்ச்சியில் கும்பல் கொலைகள் குறித்தும் பேசிய ராகுல் பஜாஜ், "கும்பல் கொலைகள் சகிப்பின்மை சூழலை உருவாக்குவதாகவும், அதனால் எங்களுக்கு அச்சமாக இருப்பதாகவும், கும்பல் கொலைகள் தொடர்பாக யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை" எனவும் கூறினார்.


மேலும் இப்போது யாரை வேண்டுமானாலும் தேசப்பற்றாளர் என அழைத்துக் கொள்ள முடிகிறது. காந்தியை யார் சுட்டது என உங்களுக்குத் தெரியும். அதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? அவர் இப்போது மட்டும் காந்தியைக் கொன்றவரை துதிபாடவில்லை முன்பே அப்படிச் செய்திருக்கிறார். ஆனால், நீங்கள்தான் அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பளித்தீர்கள். யார் என்றே தெரியாத அவரை வெல்லவும் வைத்தீர்கள். அவரை மன்னிப்பது கடினம் எனப் பிரதமர் கூறுகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறீர்கள்," என்று பிரக்யாசிங் தாக்கூர் பற்றி பஜாஜ் கூறினார்.


இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பாஜக தலையுவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, "நீங்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, இங்கு யாரும் பயத்தில் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். உண்மையில் எங்கள் அரசு குறித்து பேச உங்களுக்கு அச்சம் இருந்தால் இவ்வாறு வெளிப்படையாக அமைச்சர்கள் முன்னாலேயே கூற முடியுமா?


மேலும் இங்கு யாரும் பயப்பட வேண்டாம் என்றுதான் சொல்வேன். நரேந்திர மோடி பற்றி ஊடகங்கள் நிறைய விமர்சித்து எழுதிவருகின்றன. எங்களுக்கு எதிராக எழுதப்படுவதுதான் அதிகம் என்று நினைக்கிறேன். நீங்கள் கூறியதைப் போல ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என நினைத்தால் அதை சரிசெய்ய முயற்சிப்போம்.


நாடாளுமன்றத்தில் பிரக்யாவின் கருத்துகள் வெளிவந்த உடனே பாஜகவின் மூத்த தலைவர்கள் அவருக்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதுபோன்ற கருத்துகளை பாஜக ஏற்றுக் கொள்ளாது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்றார்.


மேலும், கும்பல் கொலை குறித்துப் அவர் பதில் அளிக்கையில் "இதற்கு முன்பும் இந்தியாவில் கும்பல் கொலை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. சொல்லப்போனால், முன்பைவிட தற்போது குறைவான சம்பவங்களே நடைபெறுகின்றன. ஆனால், இந்த சம்பவங்களில் யாரும் தண்டிக்கப்படவில்லை என்று கூறுவது தவறு. பலரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது போன்ற செய்திகள் ஊடகங்களில் பெரும்பாலும் வருவதில்லை," என்றார்.


யாரும் அச்சப்படத் தேவையில்லை.எங்களுக்கு எதிர்க்கட்சிகளின் பொய்யான விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை. ஒரு வெளிப்படைத் தன்மையான அரசை நடத்தி வருகிறோம். எங்களை யாரேனும் விமர்சித்தால் அதன் உண்மையை ஆராய்ந்து மேம்படுத்துவோம்." என்றார்.


Translated Article From THEWIRE


Next Story