Top
undefined
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு! தடுத்து நிறுத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு தி.மு.க ஓட்டம்!

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு! தடுத்து நிறுத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு தி.மு.க ஓட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 10:29 AM GMT


கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாதம் 6000 ரூபாய் வழங்கப்படும் என்றெல்லாம் தவறான வாக்குறுதிகளை மக்களிடம் திமுக அள்ளி வீசியது. அதோடு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தவறான பிரச்சாரத்தை தமிழக மக்களிடம் பரப்பியது.


இதற்கு தமிழகத்தில் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை திமுக பயன்படுத்திக்கொண்டது சமூக வலைத்தளங்களிலும் மனசாட்சியே இல்லாமல் பொய்யான தகவல்களை பரப்பி பிரதமர் மோடிக்கு எதிரான ஒரு நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தினர்


இதனால் திமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு தமிழக மக்களுக்கு திமுகவின் மோசடி மற்றும் ஏமாற்று வாக்குறுதிகள் புரிந்துவிட்டது. அவர்கள் உண்மையை தெரிந்து கொண்டனர். எனவேதான் அதன்பிறகு நடந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில், மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் திமுக தள்ளாடி வெற்றி பெற்றது.


இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல்களில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இரு தொகுதிகளும் ஏற்கனவே திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வசம் இருந்தவை. இரண்டிலும் திமுக கூட்டணி மண்ணை கவ்வியது. மக்கள் மனநிலை மாறிவிட்டது. அவர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க தொடங்கிவிட்டனர் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்ந்துகொண்டார்.


இந்த நிலையில், வருகிற 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் 2 கட்டமாக கிராமப்புற உள்ளாட்சி  அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல உள்ளதாக அறிவித்து உள்ளது. திமுகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளதால், எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் போராடி வருகிறார்.


கடந்த சில நாட்களாகவே யாராவது கோர்ட்டுக்கு போகமாட்டார்களா? என்று ஏங்கினார். ஒவ்வொரு பேட்டியின் போதும் தூண்டிவிட்டு பார்த்தார். ஆனால் யாரும் கோர்ட்டுக்கு செல்லவில்லை. அதோடு, உள்ளாட்சி தேர்தல் நடப்பது உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், உச்சநீதி மன்றம் செல்வதாக மு.க.ஸ்டாலின் தீர்மானித்துள்ளார்.


உச்ச நீதிமன்றம், திமுகவின் ஆசையை நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Next Story