Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.100 இலட்சம் கோடியில் 10 புதிய திட்டங்கள்! நிர்மலா சீத்தாராமன் விரைவில் அறிவிப்பு.!

ரூ.100 இலட்சம் கோடியில் 10 புதிய திட்டங்கள்! நிர்மலா சீத்தாராமன் விரைவில் அறிவிப்பு.!

ரூ.100 இலட்சம் கோடியில் 10 புதிய திட்டங்கள்! நிர்மலா சீத்தாராமன் விரைவில் அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 4:20 AM GMT


நடைபெறும் டிசம்பர் மாத இறுதிக்குள் குடிநீர், கல்வி, மருத்துவமனை உட்பட அடிப்படை கட்டமைப்புத் துறைகளைச் சார்ந்த 10 புதிய திட்டங்கள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும்'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.


மும்பையில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியதாவது:


நாட்டின் வளர்ச்சிக்கு குடிநீர் கல்வி மருத்துவமனை சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மிகவும் அவசியம். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு துறையில்100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.


விரைவில் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை உருவாக்குவதில் அதிகாரிகள் தீவிரமாகசெயல்பட்டு வருகின்றனர். இப்பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. திட்டங்களுக்கான நிதியாதாரம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கிடைத்ததும் ஒவ்வொரு திட்டமும் செயல்பாட்டிற்கு வரும். அதன்படி வரும் டிசம்பர் மாதம் 1 5க்குள் அடிப்படை கட்டமைப்புத் துறையில் குறைந்தபட்சம் 10 திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News