Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒவ்வொரு கிறிஸ்தவ சர்சிக்கும் தலா ரூ.1.லட்சம்! இந்துக்கள் வரிப்பணத்தில் ஹைதராபாத் மேயர் தாராளம்!

ஒவ்வொரு கிறிஸ்தவ சர்சிக்கும் தலா ரூ.1.லட்சம்! இந்துக்கள் வரிப்பணத்தில்  ஹைதராபாத் மேயர் தாராளம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 12:53 PM GMT


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஐதராபாத்தில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ சர்ச்சிக்கும், 1 லட்சம் ரூபாயும், புத்தாடைகள் அடங்கிய 500 பரிசு பெட்டிகளும் வழங்கப்படும் என்று மேயர் பொந்து ராம்மோகன் அறிவித்துள்ளார்.


ஹைதராபாத் நகரில் உள்ள 200 சர்ச்சைகளுக்கு இந்த சிறப்பு கிறிஸ்துமஸ் பணமும், பரிசும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐதராபாத்தில் உள்ள எம்எல்ஏக்களும், மாநகராட்சி உறுப்பினர்களும் இந்த சர்ச்சுகள் பற்றிய தகவல்களை சேகரித்து வழங்குவார்கள் என்று கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறும்போது, “பணத்தை அனுப்புவதற்கான வங்கி கணக்கும், ஐ.எஃப்.எஸ்.சி கோர்டு உள்பட மற்ற தகவல்களையும் எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்கள் சேகரித்து அனுப்புவார்கள். டிசம்பர் 5-ஆம் தேதிக்கும் 10-ஆம் தேதிக்கும் இடையே இந்த பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா  செய்யப்படும்.” என்று கூறினார்.


இந்துக்கள் பண்டிகையின்போது, வாழ்த்து சொல்வதற்குகூட நேரம் கிடைக்காத இதுபோன்ற மேயர்களும், பல்வேறு அரசியல் கட்சி த லைவர்களும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு பெரும்பான்மை இந்துக்களின் வரிப்பணத்திலிருந்து ஒரு சர்ச்சுக்கு 1 லட்சம் ரூபாயும், புத்தாடைகள் அடங்கிய 500 பரிசு பெட்டிகளையும் வழங்குகின்றனர்.


இது பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடும் கண்டனம் வலுத்து உள்ளது.


Next Story