Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு! மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் எப்போது?

ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு! மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் எப்போது?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 6:35 AM GMT


இன்று காலை 10 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார். 3 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித்தேர்தல் “வரும் டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளதாக” அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


இந்த தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. முதற்கட்டமாக 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் நடத்தப்படும். வேட்புமனுத்தாக்கல் டிச.6, என்றும், வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி நாள் டிச.13 எனவும், வேட்பு மனு பரிசீலனை டிச.16 என்றும், வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் டிச.18 ம்தேதி எனவும், முதல் கட்ட ஓட்டுப்பதிவு டிசம்பர் 27 மற்றும் 2 ம் கட்ட ஓட்டுப்பதிவு : டிசம்பர் 30 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஓட்டு எண்ணிக்கை ஜனவரி 2 ந்தேதி எனவும், தேர்தல் நடைமுறைகள் முடியும் நாள் ஜனவரி 4 எனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு ஜனவரி 6 ந்தேதி என்றும், மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தேர்தல் நாளன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடக்கும் எனவும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நான்கு வண்ண ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story