Top
undefined
Begin typing your search above and press return to search.

சீமான் - திருமுருகன் காந்திக்கு, இலங்கை தமிழ் எம்.பி கடும் எச்சரிக்கை!

சீமான் - திருமுருகன் காந்திக்கு, இலங்கை தமிழ் எம்.பி கடும் எச்சரிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 8:06 AM GMT


இலங்கை தமிழர்களை வைத்து தமிழகத்தில் பிழைப்பு நடத்தும் சிலர் தலைவர்கள், உண்மையிலேயே இலங்கை தமிழர்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மாறாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை இங்கே பேசுவதன் மூலம், இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்து கேடு விளைவித்து வருகின்றனர் என்கிறார் இலங்கை தமிழ் எம் பி. யோகேஸ்வரன்.


இதுதொடர்பாக இலங்கை மட்டக்களப்பு எம்.பி., யோகேஸ்வரன், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல்வாதிகள் சிலர், தேர்தல் காலம் நெருங்கியதும் மிகக் கூடுதலாக இலங்கை தமிழர் சார்பாக பேசுவார்கள். இலங்கைக்கு சென்று பிரபாகரனுடன் இருந்து சாப்பிட்டவன், குடித்தவன், வாழ்ந்தவர் என்றெல்லாம் சிலர் பேசுகிறார்கள்.


யுத்தம் நடக்கின்ற போது பேசவில்லை. யுத்ததத்துக்கு பின்பும் பேசவில்லை. எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, இப்போது பெரும் பேச்சு பேசுகிறார்கள்.





அண்மையில் மே-17 இயக்கம் திருமுருகன் காந்தி, என்று ஒருத்தர். அவர் இலங்கையில் இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை மிக மோசமாக பேசியிருக்கிறார். இந்த திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை இருக்கிறது? இலங்கையில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதியாக உள்ள எங்களையோ அல்லது எங்களது கட்சியை பற்றியோ பேசுவதற்கு, இவருக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் யார் எங்களைப் பற்றி பேசுவதற்கு?


நாங்கள் அங்கு துன்பப் பட்டவர்கள்.


தமிழீழ விடுதலை புலிகளிடம் ஒரு செயற்பாடு இருக்கிறது. அவர்கள் ஏதாவது செய்தால் அதை வெளிப்படையாக சொல்லி விடுவார்கள். “நாங்கள் இதை செய்திருக்கிறோம்” என்று கூறிவிடுவார்கள். ஆனால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது சார்பாக தாங்கள்தான் அதை செய்தோம் என்று அவர்கள் எப்போதும் எந்த இடத்திலும் கூறவில்லை.


இங்குதான் அந்தக் கருத்துக்கள் எல்லாம் வருகிறது. புலிகள் இவ்வாறானவற்றை செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் இங்கு கதைக்கின்ற சீமானை போன்றவர்கள், வெளியிடுகின்ற இந்த கருத்து ஈழத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு செய்கின்ற ஒரு பாரிய துரோகம்.


இவ்வாறு மட்டக்களப்பு எம்பி யோகேஸ்வரன் கூறினார்.


Next Story