Top
undefined
Begin typing your search above and press return to search.

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிர் இழந்த சம்பவம்! தலைமறைவான கட்டிட உரிமையாளர் கைது!

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிர் இழந்த சம்பவம்! தலைமறைவான கட்டிட உரிமையாளர் கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 11:09 AM GMT


மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் பெய்து கொண்டிருந்த கன மழையின் போது அருகில் இருந்த பழைய கருங்கல் மதில் சுவர் இடிந்து 4 வீடுகளின் மேல் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இதற்குக் காரணமான மதில் சுவற்றுக்கு உரிமையாளரான தலைமறைவாக இருந்த சிவசுப்ரமணியத்தை போலீசார் இன்று கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி, நடூர் கண்ணப்பன் லே - அவுட்டில் ஆனந்தகுமார், 40, அருக்காணி, 45, சிவகாமி, 50, ஓவியம்மாள், 50, ஆகியோரின் வீடுகள் அடுத்தடுத்து இருந்தன. காய்கறி மண்டிகளில் கூலி வேலை பார்க்கும், இந்த நான்கு குடும்பத்தினரும், 'ஹாலோ பிளாக்' கற்களில் சுவர் எழுப்பி, அதன் மீது ஓடு வேய்ந்து, வசித்து வந்தனர்.


நேற்று முன்தினம் இரவு முதலே, கன மழை பெய்ததால், உறவினர்கள் அனைவரும், வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த திலகவதி, 38, என்பவரும், இவர்களது வீட்டில் படுத்திருந்தார். மொத்தம், 17 பேர், நான்கு வீடுகளில் துாங்கிக் கொண்டு இருந்தனர்.





இவர்களது வீடுகளின் பின்புறம், 'சக்கரவர்த்தி துகில் மாளிகை' என்கிற ஜவுளிக்கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம்( வயது 66 )என்பவருக்கு சொந்தமான, 15 அடி உயரம், 50 அடி நீளம் உடைய, கருங்கற்களில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இருந்தது.


கன மழை காரணமாக, ஓடைகளிலும், பள்ளங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு, சுப்பிரமணியத்திற்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து, நான்கு வீடுகளின் மீது விழுந்தது. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சிவசுப்பிரமணியன் தலைமறைவானார். அவரைப் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில், சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story