Top
undefined
Begin typing your search above and press return to search.

அறநிலையத் துறையில் மிகப்பெரிய கொள்ளை அம்பலம்! 5,544 கோயில்கள் மாயம்! பல்லாயிரம் ஏக்கர் சொத்துக்களும் ஏப்பம்!

அறநிலையத் துறையில் மிகப்பெரிய கொள்ளை அம்பலம்! 5,544 கோயில்கள் மாயம்! பல்லாயிரம் ஏக்கர் சொத்துக்களும் ஏப்பம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 6:04 AM GMT


இந்து அறநிலையத்துறை 1959-இல் தொடங்கப்பட்டது. அதன் பிறகு இந்து கோயில்கள், இந்து கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், சொத்துக்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தன. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கல்வித் துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.


இந்து கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தபிறகு, தமிழகத்தின் ஆட்சியும் திராவிட கட்சிகள் வசம் போய்விட்டது. திமுக ஆட்சியில் ஊழல்கள் மலிந்தபோது, இந்து அறநிலையத் துறையிலும் கறை படியத் தொடங்கியது.


அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள், கட்டிடங்கள், சொத்துக்களை சூறையாடுவதில் அமைச்சர்களும், இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கொள்ளை போயுள்ளன. இந்து கோயில்களில் உள்ள ஏராளமான சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளன. ஏராளமான தெய்வ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரங்கேறியுள்ளன.


இந்து கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது ஏற்கவே வெளியான செய்திகள். இந்து சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது, சிலை தடுப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்து தெய்வங்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்தவை. இந்து ஆலய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் பலமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன.


ஆனால் கோயில்களே கொள்ளை போன அதிர்ச்சித்தகவல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுவும் ஒன்றிரண்டு கோயில்கள் அல்ல, 5,544 கோயில்கள், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு இருந்து காணாமல் போயுள்ளன. இது பேரதிர்ச்சியாக உள்ளது.


சமீபத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு குறியீடுகள் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டன. இந்த பணியின்போது தான் கோயில்கள் கொள்ளை போன அதிர்ச்சிகர தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 1959-இல் இந்து அறநிலையத்துறையின் கீழ் கோவில்கள் வந்ததில் இருந்து இதுவரை 5,544 கோயில்கள் காணாமல் போயுள்ளது. இதுபோல பல ஆயிரம் ஏக்கர் சொத்துக்கள் மாயமாகி உள்ளன.


இந்து கோயில்களை, அறநிலையத்துறை பதிவேட்டில் இருந்து நீக்கி, அந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்களையும் பதிவேட்டிலிருந்து நீக்கி கொள்ளையடித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44,190 கோவில்கள் இருந்துள்ளன. இந்த கோயில்கள் படிப்படியாக குறைந்து 2018 – 19 – ஆம் ஆண்டு கணக்கின்படி 38,646 கோயில்களாக குறைந்துள்ளன. அதாவது 5,544 கோயில்களும், அவற்றிற்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


இந்து அறநிலையத் துறையில் நடந்துள்ள இந்த மாபெரும் கொள்ளை இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்து கோயில்களையும், கோவில் சொத்துக்களையும் கொள்ளையடித்த அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், அதற்குத் துணைபோன ஊழியர்கள், அனைவர் மீதும் தயவு - தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.


Next Story