Top
undefined
Begin typing your search above and press return to search.

அழிந்து விட்டதாக சொல்லப்பட்ட ஐசிஸ் இயக்கம் இன்னும் இருக்கிறதா? உலகம் தழுவிய இயக்கமாக உருவெடுத்த பயங்கரம்!

அழிந்து விட்டதாக சொல்லப்பட்ட ஐசிஸ் இயக்கம் இன்னும் இருக்கிறதா? உலகம் தழுவிய இயக்கமாக  உருவெடுத்த பயங்கரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 2:26 AM GMT


மத்திய கிழக்கு நாடுகளில் அழிந்து விட்டதாக சொல்லப்பட்ட ஐசிஸ் இயக்கம் இன்று உலகம் தழுவிய இயக்கமாக மாறி வருகிறது, அமெரிக்கா கண்டதை தவிர மற்ற பெரும்பான்மையான இடங்களில் ஐசிஸ் தனது பயங்கரவாதத்தை நடத்தி வருகிறது, சமீபத்தில் லண்டனில் நடந்த சம்பவத்திற்ற்கு ஐசிஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு லண்டன் பாலத்தில் சென்றுகொண்டிருந்தவர்களை கண்மூடித்தனமாக ஆயுதத்தால் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், இதை செய்த லண்டனை சேர்ந்த உஸ்மான் அலி கான் ஐசிஸ் பயிற்சி பெற்ற போராளி என்று ஐசிஸ் இயக்கம் அறிவித்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டு இதுபோன்ற நடந்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் யுயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது, பிரான்சலியும் இதே போன்று ஐசிஸ் இயக்கம் தாக்குதல் நடத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஐசிஸ் இயக்கம் தாக்குதல் நடத்த பின்பற்றும் வழி மிக எளிதானது அதாவது தனி மனிதனாக சென்று தாங்குவது, "லோன் ஒஉல்ப் " என்று அழைக்கப்படும் இந்த பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய பேச்சுகளுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்ததா என்று தெரியவில்லை அனால் நாம் முன்னரே சொன்னபடி ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில் இஸ்லாமிய மத பரவலும், இஸ்லாமிய மாதத்தில் அதி தீவிரமாக இருக்கின்ற அமைப்புகளும் பெருகி வருகின்றன, இங்கிலாந்து இதை கட்டுப்படுத்த தகுந்த முறைகளை கையாளவில்லை என்றால் மிக பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடலாம், மேலும் இங்கிலாந்து பிரதமர் முஸ்லிம்களை பற்றி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த இங்கிலாந்தின் முஸ்லீம் அமைப்புகள் இந்த தாக்குதலை நடத்திய ஐசிஸ் ஐ அதே அளவு கடுமையோடு கண்டித்திருக்க வேண்டும் அனால் அவர்கள் அனால் அதுபோன்ற கண்டனம் அவர்கள் தரப்பில் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story