Top
undefined
Begin typing your search above and press return to search.

2024 ஆம் ஆண்டுக்குள் சட்ட விரோதமாக குடியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் -அமித்ஷா!

2024 ஆம் ஆண்டுக்குள் சட்ட விரோதமாக குடியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் -அமித்ஷா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 2:12 AM GMT


ஜார்க்கண்டில் 5 கட்ட தேர்தலில் கடந்த 30ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்து, இரண்டாம் கட்ட தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கிறது,நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது பேசிய அவர் 2024 ஆம்  ஆண்டுக்குள் சட்ட விரோதமாக  குடியிருப்பவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார்,அண்மையில் குளிர்கால கூட்டத்தொடரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை  அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மோடி அரசு பல சாதனைகளைப் படைத்து உள்ளதாக தெரிவித்த அவர்,ஜார்கண்டில் நக்சலைட்டுகளை பெரிதளவு ஒழித்து விட்டதாக தெரிவித்தனர்,ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியில் ஊழல் அற்ற ஆட்சியை தாஸ் அரசு கொடுத்துள்ளது,ஜார்கண்டின் வரலாற்றில் தாஸ் அரசாங்கம் முதன்முதலில் முழுமையான  ஆட்சி காலத்தை நிறைவு செய்ததாக தெரிவித்தார்,ராகுல் காந்தி இன்று ஜார்க்கண்டில் இருக்கிறார். காங்கிரஸ் அரசாங்கங்கள் தங்கள் ஆட்சியின் 55 ஆண்டுகளில் ஜார்கண்டிற்காக என்ன செய்தன என்பது குறித்து ஒரு கணக்கைக் கொடுக்குமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன். நாங்கள் ஐந்து ஆண்டுகளில் செய்ததைப் பற்றிய கணக்கையும் தருவோம் என் கூறினார்.


Next Story