Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் அசுரத்தனமான எழுச்சி ஒரு சிலரை ஆட்டம் காண செய்கிறது - பொருளாதார உயிர்சக்தியின் தலையாய நிலை!

இந்தியாவின் அசுரத்தனமான எழுச்சி ஒரு சிலரை ஆட்டம் காண செய்கிறது - பொருளாதார உயிர்சக்தியின் தலையாய நிலை!

இந்தியாவின் அசுரத்தனமான எழுச்சி ஒரு சிலரை ஆட்டம் காண செய்கிறது - பொருளாதார உயிர்சக்தியின் தலையாய நிலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 2:09 AM GMT


பழைய இந்தியாவின் சாம்பல் துகள்களிலிருந்து புதிய இந்தியா கிளர்ந்தெழுந்துள்ளது. இந்த
புதிய இந்தியா மிகவும் துணிவு மிகுந்ததாக அனைத்தையும் நேர்மறையான
கண்ணோட்டத்தில் காணக்கூடிய இந்தியாவாகவே இருக்கிறது. இந்த இந்தியா 1.35
பில்லியன் மக்களின் நம்பிக்கையை உயர்த்துவதாக உள்ளது. இத்தனை நாளும் ஊழலின்
பிடியில் சிக்கி, மதிப்பற்ற நடைமுறைகளின் கோரப்பிடியில் சிக்கியிருந்த பழைய இந்தியா
எனும் பிம்பத்திலிருந்து விடுப்பட்டு ஒரு புதிய இந்தியாவாகவே இது உயர்ந்து வருகிறது.


இந்த அசுரத்தனமான எழுச்சி ஒரு சிலரை ஆட்டம் காண செய்கிறது. சமீபத்தில்( நவம்பர் 18)
தி ஹிந்துவில் வெளியான கட்டுரையான “The Fountainhead of India’’s economic malaise”’
ஐ எழுதியிருப்பவர் முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங். அவர் குறிப்பிடுகிறார் “மக்கள்
அரசின் மீது தங்களின் நம்பிக்கையை இழந்துள்ளதே, தற்போதைய பொருளாதார
சீர்க்கேட்டின் தலையாய பிரச்சனை “ எனக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் புதிய இந்தியாவின்
வரலாறு முற்றிலும் தலைகீழானது. மக்களிடம், சமூகத்திடம் அரசின் மீதான நம்பிக்கையை கடந்த காலங்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீட்டெடுத்து
மறுசீரமைத்திருப்பதே பொருளாதார சூழலில் தலைச்சிறந்த நிகழ்வாக உள்ளது. மேலும்
டாக்டர். சிங் அவர்கள் “அச்சம் நிறைந்த சூழலை “குறித்து எழுதுகிறார், இன்று அச்சத்தில்
இருப்பவர்கள் எல்லாம் அவர் பிரதமராக இருந்த காலத்தில் உருவான அநியாயக்காரர்களே
என்பதை அவர் நிச்சயம் உணர்வார்.


வளர்ந்து வரும் வலிமையான நாடு



இதை நான் கட்சியில் இருப்பதாலோ, அல்லது பதவியில் இருப்பதாலோ சொல்வதில்லை. ஒரு சாதாரண இந்திய பிரஜையாகவும், வியாபார மேலாண்மையின் ஒரு மாணவனாக இருந்து குறிப்பிடுகிறேன். இந்தியா உலகரங்கில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது.


ஜிடிபி யின் வளர்ச்சி விகிதம் மிக உறுதியானதாக 7% நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பணவீக்கம், நிதிப்பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவை கட்டுக்குள்
வைக்கப்பட்டுள்ளன. முதன்மை வேலைவாய்ப்பு விகிதம் 433 மில்லியனிலிருந்து 457
மில்லியனாக கடந்து ஐந்தாண்டுகளில் உயர்ந்துள்ளது. இந்தியாவின் சர்வதேச பங்குசந்தை
சாதனைபடைக்கும் நிலையில் உள்ளது.


எளிமையாக தொழில் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் 142 ஆம் இடத்திலிருந்து 63 ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. கார்பரேட் வரிகள் அடியோடு குறைந்து தற்சமயம் உலக
நாடுகளில் குறைவான வரியை விதிக்கும் நாடாகவும் உள்ளது. மேலும் ஆற்றல், பின் டெக்,
மற்றும் குறைந்த விலையில் தரமான சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா முன்னிலை
வகிக்கிறது.


பங்குசந்தை கடந்த இரண்டாண்டுகளில் இரட்டிப்பாகி 50 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக
முதலீட்டாளர்களின் வளத்தை கூட்டியுள்ளது. அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு 40-50
பில்லியன் டாலர்களாக உள்ளது. வென்ட்சுயர் கேப்பிடல், மற்றும் ப்ரைவேட் கேப்பிட்டல்
ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது இருந்ததை காட்டிலும் மூன்று
மடங்கு லாபத்தில் இயங்குகிறது. நம்முடைய தொடக்கசிலை சுற்றுசூழல் திட்டம் உலகரங்கில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியா யுனிகார்ன் நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. தற்சமயம் 20 யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. இனி வரும் சில ஆண்டுகளில் 30 யூனிகார்ன் நிறுவனங்கள் வரவுள்ளன.


வளர்ச்சி மெல்ல மெல்ல தலை உயர்த்த துவங்கியுள்ளது:



நடைமுறையில் உள்ள தொழில் முனைவோர்கள், சுழற்சியான புற முறைகளிலிலேயே தங்கி விடாமல், அதற்கு மாறாக நீடித்து நிற்கும் நிலையிலேயே தங்கள் தொழிலை
கட்டமைக்கிறார்கள். மற்றும் இந்தியாவில் நிலை தற்போது மிக தெளிவாக அனைவராலும்
காண முடிகிறது. தற்சமயம் 5000 ட்ரில்லியன் டாலர்களாகவும் மேலும் 10000 ட்ரில்லியன்
டாலர்களாக உயரும் நல்ல நிலையிலும் இந்தியாவின் பொருளாதாரம் உள்ளது. நாம் மிக
குறைந்த காலத்திலேயே உலகின் மூன்றாவது பொருளாதாரமாகவும், இன்னும் சொன்னால், உலகரங்கில் வளர்ந்து வரும் நாடாக ஜொலித்து கொண்டிருக்கிறோம்.


பில்லினியர் ராஜாவிலிருந்து மக்கள் ராஜா வரை – நடந்தவை என்ன?


இந்த அனைத்து வளர்ச்சிகளும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஐந்தரை
ஆண்டுகளில் சாதித்தவை. இவரின் சாதனை மூலம் இந்தியா பொருளாதார ரீதியாகவும்,
அரசியல் ரீதியாகவும் மாற்றம் கண்டுள்ளது. மிக முக்கியமாக மக்களிடம் அரசின் மீதான
நம்பிக்கை மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் சமூகம் அரசின் மீதான நம்பிக்கையையும், சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் இழந்திருந்தது. அன்றிருந்த மக்களுக்கு இந்தியாவின் எதிர்காலம் ஐயம்மிகுந்ததாக இருந்தது. தீவிரவாதிகள் இந்தியாவை மீண்டும் மீண்டும் தாக்கினார்கள்.


இந்தியாவின் பெரும்பான்மையான பகுதி இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
நிழலுலக ஆட்கள் இந்தியாவை இயக்கி வந்தனர். ஒவ்வொறு அமைச்சகமும் தன் விருப்பம்
போல இயங்கியதில் அரசாங்கம் துண்டு துண்டாக சிதறியிருந்தது. அரசு உத்தரவுகள் எல்லாம்
ஹோட்டல் லாபிக்களிலில் வழங்கப்பட்டன, பெரும் கடன்கள் வெறும் ஒரு போன்
அழைப்பின் மூலம் வழங்கப்பட்டது. பணவீக்கம் மற்றும் பண பற்றாக்குறை காரணமாக
இந்திய பொருளாதார வளர்ச்சி பாதாளத்திற்கு சென்றது. இந்தியாவையே விற்க துணிந்த
ஐக்கிய முற்போக்கு அரசினை பில்லியனர் ராஜாக்கள் என அடைமொழியிட்டு அழைக்கலாம்.


யாரால் அந்த துன்பமிக்க காலத்தை மறக்க இயலும்?


பிரதமர் நரேந்திர மோடி சட்டத்தை மீட்டெடுத்தார். அரசின் மீதான நம்பிக்கை சீர் செய்தார்.
தற்போது இந்தியா புதிய நம்பிக்கையை நோக்கி நடையிட தொடங்கியிருக்கிறது. வரா
கடனை சரி செய்யும் படி அனைத்து வங்கிகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
மோசடி முதலாளிகள் போட்டியிட முடியாமல் தோல்வியடைகிறார்கள். விசாரணையின்
பிடியிருகும் போதும், கைது நடவடிக்கை முன்னே தெரிகிற போது தவறு செய்தவர்களின்
எலும்புகள் உதறத்துவங்கிறது. வழக்கை தவிர்ப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தற்போது அவர்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். இந்த விசாரணைகள் அனைத்தும் சட்டபூர்வ செயல்முறைக்கும் அவை நீதி த்துறையின் மறு ஆய்விற்கும் முற்றிலும் உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்று பழைய பில்லியனர் ராஜாக்கள் யாரும் இல்லை. வெறும் மக்கள் ராஜாக்கள் தான். பிரதமர் திரு. மோடி அவர்களின் அரசு பரந்த நோக்கில் செய்துள்ள சீர்திருத்தங்கள் அனைத்தும் இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைத்துள்ளது. முன்னர் இருந்த ஆட்சி உருவாக்கிய தாக்கம் என்பது இன்று அளவும் நம் நாட்டை பாதித்து வருவது என்பதால், சில இடையூறுகள் தவிர்க்கமுடியாதவை ஆகின்றன. மேலும் தற்போதைய சீர்திருத்தங்கள் பொருளாதார நிலைபாட்டை மிக ஆழமாக மறு வடிவமைப்பு செய்துள்ளன.
சீர்த்திருங்கள் அனைத்து தளத்தில் ஏற்படுத்தப்படுவது என்ற போதும் அவற்றை மிக
முக்கியமான ஐந்து தளங்களில் வகைப்படுத்தலாம்.


1) வெளிப்படையான, விதிகளை அடிப்படையாக கொண்ட பொருளாதார தோழமை முதலாளித்துவத்திலிருந்து விடுவிதல்


( 2) மேக்ரோ பொருளாதாரத்தின் உறுதித்தன்மையை மீட்டமைத்தல் மற்றும் பராமரித்தல்.


(3) வலுவான சமூக பாதுகாப்பு அரணை உருவாக்குதல்


(4) உலகதரத்திற்கு உள்கட்டமைப்பை
மேம்படுத்துவது.


(5) நிதி அமைப்பை வலுப்படுத்துதல். புதுமை சார்ந்த வணிகங்கள் மற்றும் நன்கு நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு முதலீடுகள் பாய்ந்தும், பணப்புழக்கம் கூடியும் வருகிறது.


இலக்குகளை அடைதல்


நம்முடைய போட்டி நிறைந்த புதுமை நிறைந்த இந்திய பொருளாதாரம் மிக எளிமையாக
அதன் இலக்குகளை எட்டிவிடும். ஜிடிபி 5 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் நிலையில், தனி நபர் ஜிடிபி டாலர் 3600க்கு மேல் உள்ளது. மேலும் 10 ட்ரில்லியன் டாலர்களாக ஜிடிபி
உயரும் போது தனி நபர் ஜிடிபி 6200 டாலர்களை அடையும். இந்த அளவில், இந்திய உலக
நாடுகளின் மத்தியில் வளர்ந்து வரும் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நாடாக உயரும்.


அதீத ஏழ்மை என்னும் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, இன்று ஏரத்தாள 70
மில்லியன் மக்களே அதீத வறுமையில் இருப்பவர்களாக அறியப்படுகிறார்கள். இந்தியா 5
ட்ரில்லியன் டாலர் ஜிடிபியை அடைகிற போது இந்தியாவிலிருந்து வறுமை என்பது
அடியோடு வெளியேறும்.


மனித குலத்திற்கு நிகரற்ற பல சாதனைகளை நிகழ்த்தி காட்ட முனைப்பு கொண்டுள்ளது
நரேந்திர மோடி அரசு. இந்த அரசு 1.35 பில்லியன் குடிமக்களிடத்தில் அமைதியையும்,
வளத்தையும் நிலைநாட்டியுள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி, அதீத வறுமையிலிருந்து மீட்டுள்ளது. பல காலமாக தேசத்தை கட்டுண்டு வைத்திருந்த
வழக்குகளுக்கு எல்லாம் முடிவு கட்டியுள்ளது. இந்தியர்களை பெருமையுடன்
வாழச்செய்துள்ளது. அனைத்து விமர்சனங்களும் இந்த ஜனநாயக நாட்டில்
வரவேற்கப்படுகின்றன. இச்சமயத்தில் நரேந்திர மோடி அவர்களின் அரசு இந்தியாவின் முழு திறமையையும் வெளிக்கொணர்ந்து உலக நாடுகள் மத்தியில் சிறப்பான ஒரு இடத்தை தக்க வைக்க செய்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News