Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒரு மணி நேரத்தில் “தீண்டாமையை” ஒழித்த மு.க.ஸ்டாலின்! மாபெரும் “காமெடியன்” ஆனார்!

ஒரு மணி நேரத்தில் “தீண்டாமையை” ஒழித்த மு.க.ஸ்டாலின்! மாபெரும் “காமெடியன்” ஆனார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 12:53 PM GMT


பிணத்தை வைத்து அரசியல் செய்வதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிகர் அவர்தான். எங்கு என்ன காரணத்திற்காக ஒருவர் இறந்தாலும், உடனே ஓடோடி சென்று அந்த பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது என்பது திமுகவின் முக்கிய கொள்கையாக இடம்பிடித்து விட்டது.


கோவை மேட்டுப்பாளையத்தில் மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக இறந்தார்கள். இது ஒரு விபத்து. அதோடு பரிதாபத்துக்குரிய சோக சம்பவம்.


இதை வைத்து அரசியல் செய்ய களம் இறங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று மேட்டுப்பாளையம் சென்று இதனை அரசியலாக்கி பேட்டி கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றார்.


இந்த சம்பவம் தொடர்பாக முகஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், “மேட்டுப்பாளையத்தில் “தீண்டாமை” சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்து இருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது” என்று குறிப்பிட்டிருந்தார்.




https://twitter.com/mkstalin/status/1201746075117178880


அதில் “தீண்டாமை சுவர்” என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டி இருந்தார். ஓட்டுக்காக ஒரு சுவரை “தீண்டாமை” சுவர் என்று சாயம் பூசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பிணத்தை வைத்து ஜாதி ஓட்டு அரசியல் செய்தார்.


ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தனது ட்விட்டர் பதிவில் “தீண்டாமை” சுவர் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனது ட்விட்டர் பதிவில் "தீண்டாமை" ஒழிக்கப்பட்டு சுவர் மட்டுமே இருந்தது.




https://twitter.com/mkstalin/status/1201760017885478912


இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் “தீண்டாமையை” ஒழித்த ஒப்பற்ற தலைவர் என்ற பெருமையை ஸ்டாலின் பெற்றுள்ளார்.


இந்த பதிவுகளை நெட்டிசன்கள் தங்களின் வழக்கமான விமர்சனங்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்.




https://twitter.com/MadanRavichand4/status/1201818830927872000


இதற்கிடையில் இந்த சுவரின் உரிமையாளர் பழங்குடி இன வகுப்பை சேர்ந்தவர் என்ற தகவலை தில்லை கோவிந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்.


அவர் தனது பதில் பதிவில், “சுவரின் உரிமையாளர் பழங்குடியினர் வகுப்ப்பைசார்ந்தவர் என்ற உண்மை தெரிந்ததும் "தீண்டாமை சுவர்" ஒருமணி நேரத்தில் வெறும் "சுவர்" ஆனது. பிணத்தில் சாதி அரசியல் தேடும் தீண்டத்தகாத இயக்கம் தி.மு.க.! இந்நேரம் அந்த உரிமையாளர் வேறு சமூகமாக இருந்திருந்தால் கலவரத்திற்க்கு வழிவகுத்திருப்பார்” என்று உண்மையை போட்டு உடைத்துவிட்டார்.


அடுத்த சில நிமிடங்களில் அவரை பிளாக் செய்துவிட்டனர்.




https://twitter.com/Thillaigovind81/status/1201825953770377216


இதேபோல, ரகுநாத் தனது பதில் பதிவில்,” இடிந்து விழுந்த சுவரின் சொந்தக்காரர் S.T(படுகர்-பழங்குடியினம்) என்று தெரிந்ததும் 1 மணி நேரத்தில் தீண்டாமை சுவர் வெறும் சுவரானது! பிணத்திலும் சாதி அரசியல் செய்யும் கீழ்த்தரமான இயக்கம் திமுக” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/Dragu40A/status/1201825654628474880


மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் பேசமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது அட்மினுக்கும் துண்டு சீட்டு இல்லாமல் எதுவும் ஓடாது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


வாழ்க! துண்டு சீட்டு கழகம்!


Next Story