Top
undefined
Begin typing your search above and press return to search.

இத்தாலியிலிருந்து ஊடுருவியவர் சோனியா! - காங்கிரசின் மூக்கை உடைத்த பா.ஜ.க!

இத்தாலியிலிருந்து ஊடுருவியவர் சோனியா! - காங்கிரசின் மூக்கை உடைத்த பா.ஜ.க!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 9:31 AM GMT


பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஊடுருவல் காரர்கள். அவர்கள் குஜராத்தில் இருந்து டெல்லிக்கு ஊடுவியவர்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியது தொடர்பாக, பாஜக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


அப்போது பேசிய பஜக எம்பி உதை பிரதாப்சிங், “பாஜக தலைவர்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துக்களை ஏற்க முடியாது. பிரதமர் மோடி பாஜக தலைவர் மட்டுமல்ல, இந்த நாட்டின் பெருமைக்குரிய பிரதமர். சவுத்ரி இந்த அவையில் மூத்த உறுப்பினர். ஆகவே அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.


பாஜகவின் மற்ற உறுப்பினர்களும் பத்திரிகை மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினர். இதுதொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரை ஊடுருவல்கள் என்று கூறியதை அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும். மோடி ஒரு தேசிய தலைவர். இரண்டாவது முறையாக மக்கள் அவரை பிரதமராக தேர்வு செய்து உள்ளார். பிரதமர் மோடியை விமர்சிப்பது மூலம் அவரை தேர்வு செய்த மக்களை விமர்சிப்பதற்கு சமம். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கருத்தின் அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸ் கட்சியே ஒரு ஊடுருவல் காரரின் தலைமையில்தான் இயங்குவதாகக் கூற வேண்டியது வரும். சவுத்ரி மேற்குவங்கத்தில் இருந்து டெல்லிக்கு வந்து இருப்பதால், அவரையும் ஊடுருவல் காரர் என்று கூற முடியுமா? எனவே பொறுப்புடன் பேச வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.


இதுபோல பாஜக எம்பி ராஜேந்திர அகர்வால் பேசும்போது, “காங்கிரஸ் கட்சியை இத்தாலியிலிருந்து வந்தவரின் தலைமையில் செயல்படுகிற ஒரு கட்சி. திருமணத்திற்குப் பிறகு கூட, இந்தியக் குடியுரிமையை சோனியாகாந்தி பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை” என்று கூறி காங்கிரஸ் மூக்கை உடைத்தார்.


Next Story