Top
undefined
Begin typing your search above and press return to search.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் தான் இந்தியாவிலேயே முதல் இடம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டத்திற்கு பெருகும் வரவேற்பு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் தான் இந்தியாவிலேயே முதல் இடம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டத்திற்கு பெருகும் வரவேற்பு!

MuruganandhamBy : Muruganandham

  |  3 Dec 2019 9:28 AM GMT


சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் தான் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அஞ்சல் துறையில் ரூ.3,666 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.


பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம் என்ற சிறு சேமிப்பு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி தொடங்கி வைத்தார்.


இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அஞ்சலகங்கள் அல்லது வங்கிகளில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம்.


இந்த கணக்கில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.1,000, அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் டெபாசிட் செய்ய முடியும்.


இத்திட்டம் பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் ஆகிய செலவுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதன் தேவையை உணர்ந்து  தமிழகத்தில் அதிகமானோர் இத்திட்டன் கீழ் டெபாசிட் செய்து வருகின்றனர்.


இந்திய அஞ்சல் துறையிலேயே இத்திட்டத்தில் தமிழகம் 18 லட்சத்து 71 ஆயிரத்து 485 கணக்குகளை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. உத்திரபிரதேசம் 2ம் இடத்திலும், கர்நாடகா 3ம் இடத்திலும் உள்ளது.


இந்தியாவிலேயே தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தான் இத்திட்டத்தில் அதிக கணக்குகளை கொண்டுள்ளது.


தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 18 லட்சத்து 71 ஆயிரத்து 485 கணக்குகள் உள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 31.10.2019 வரை ரூ.3,666 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.


Next Story